வெறுங் கூடு

ஆயிரம் கூடழித்து ...
உன் கூட்டை மறைக்க ...
அழகாக்குமாம்... பட்டாடை...

ஆயிரம் செடியழிந்து
உன் கூட்டை
அழகாக்குமாம்... பருத்தி ஆடை...

ஆயிரம் பயிரழிந்து...
உன் கூட்டுக்கு
உணவாகுமாம்...நெல்லும்...

ஆயிரம் வேரழிந்தே ....
உன் கூட்டிற்கு
உயிர் கொடுத்தால் ... மருந்து...

ஆயிரம் இதழழிந்து ...
உன் கூட்டிற்கு
அழகு கொடுத்ததாம்...
வண்ணப் பூச்சுகள் ....

ஆயினும்...நீ அழிய...
உன் கூடோ...
மண்ணிற்காம்.

எழுதியவர் : PASALI (17-Jul-21, 6:15 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 82

மேலே