தென்றலின் சமத்துவம்

தென்றல் தழுவிய போதிலந்த வெள்ளைப்பூ கேட்டது
தென்றலே ஊமத்தை யைதழுவி மகிழ்கிறா யாஎன்று
தென்றலுக்கு மனிதர் போலும் பேதங்கள் என்பதில்லை
தென்றலின் சித்தாந்தம் சமத்துவம் முல்லையும் நீயுமொன்றே !


தென்றலின் சமத்துவத்தில் மலர்களில் வேறுபா டில்லை
----என்றும் ஈற்றடியை அமைத்துப் படிக்கலாம்
-----கவிதை கலித்துறை சாரும். ஒரே எதுகை ஐந்து சீர் நெடிலடி நான்கு .
மா விளம் காய்ச்சீர் விரவிவந்த கலிப்பாவின் இனம்

தென்றல் தழுவஅவ் வெள்ளைப்பூ கேட்டது
தென்றலே ஊமத்தை யின்தழு வல்மகிழ்வா
தென்றலுக் கிம்மனிதர் கள்போலும் பேதமில்லை
தென்றலுக்கு எல்லாமொன் றே

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக
தென்றலுக்கு இம்மனிதர் = தென்றலுக் கிம்மனிதர்
கு குற்றியலுகரம் வரும்போது புணர்ச்சிக்குப் பின்னே சீர் பிரிக்க வேண்டும்

தென்றலுக்கு எல்லாமொன் றே ---தென்றலுக் கெல்லாமொன் றே
என்று தான் பிரிக்க வேண்டும். அப்படியே கு வுடன் எழுதினாலும் தளை
தட்டுவதில்லை என்பதைக் காட்ட அப்படியே விட்டுவிட்டேன்

கைக்கு அணிவளை யல்
நேர் நேர் --தேமா அணி- நிரை --மா முன் நிரை வெண்பா விதி சரிதானே
கைக் கணிவளை யல் ---என்றே பிரிக்கவேண்டும் கைக் ஓரசையில் கைக்கிங் செய்வதை வெண்பா அனுமதிக்காது
பூங்கைக் கணிவளை யல் ---இப்போது தளை தட்டா வெண்பா ஈற்றடி

மாங்கனி கன்னத் தினில்அணி செய்திட
பூங்கைக் கணிவளை யல்
---ஒரு விகற்ப குறள் வெண்பா
---யாப்புக் குறிப்புகள் யாப்பார்வலர்களுக்கு மட்டும்
கவிதை எல்லோருக்கும்
நானறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-21, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 200

மேலே