செல்லாத நேர்மை

செல்லாத நேர்மை
==================

கிழிந்த நோட்டைத்
தெரியாமல் வாங்கி
ஏமாற்றப்பட்டதில் இருந்தே
தவியாய் தவித்தது மனம்..

இரண்டு மூன்று முறை
மாற்ற முயன்று
நிராகரிக்கப்பட்டது நேர்மை..

இப்போது நேர்மையை மாற்ற முயன்றான்
மாறிவிட்டது நோட்டு
கிழிந்து போன நேர்மை கண்டு
சிரித்த படி

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : A வேளாங்கண்ணி (18-Jul-21, 10:43 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : sellaatha nermai
பார்வை : 74

மேலே