தனிமையும் நானும்

#இசையிடம் இச்சை கொள்கிறேன்!
#இயற்கையால் ஈர்க்கப்படுகிறேன்!
#புத்தகத்திற்குள் புதைக்கப்படுகிறேன்!
#புன்னகையை புறக்கணிக்கிறேன்!
#உறக்கத்திடம் உரையாடுகிறேன்!
#உறவுகளிடம் உண்மை தேடுகிறேன்!
#சிரிப்புடன் சண்டையிடுகிறேன்!
#கோபத்தை கொலை செய்கிறேன்!
#பார்வையற்று பரிதவிக்கிறேன்!
#பாதையின்றி பயணிக்கிறேன்!
#தலையனையிடம் தாலாட்டு கேட்கிறேன்!
#தவிப்புகளின் தலைவனாகிறேன்!
#மௌனத்திடம் மொழி பயில்கிறேன்!
#மௌவையின் குரல் தேடுகிறேன்!
#நிழலில் முகம் தேடுகிறேன்!
#நிழலாய் பின் தொடர்கிறேன்!
#காற்றிடம் கைகள் கோர்கிறேன்!
#காகிதத்திடம் கவிதை பேசுகிறேன்!
#மாலையிடம் மன்னிப்பு கேட்கிறேன்!
#மழலையை ரசித்து கொள்கிறேன்!
கொடுமையிலும் கொடுமையாம் என் தனிமை,
நினைவில் நீ வருகையில் இனிதாகிறது!!!
உன் வருகைக்காக என் கண்ணீரை
உரை பணியாய், உறைய வைத்து
கம்பலமாக்கி
காத்திருக்கிறேன்,
தனிமையின்
காதலனாய்!!!
$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:15 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 381

மேலே