மரத்தின் நிழலை தேடியபோது தோன்றிய வரிகள்

:
#ஏய் புவியீர்ப்பு விசயே! நீ ஜெயித்தது விதையிடம் மட்டும் தான்,
உன்னை வீழ்த்த அதே விதையில் இருந்து மரம் என்னும் விருட்சம் வளர்ந்து வரும் - முடிந்தால் தடுத்துப்பார்!🌴
#சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன் - ஏன் மரம் மாதிரி நிற்கின்றாய் என்று?
பாவம் அவர்களுக்கு தெரியவில்லை இந்த நாட்டில் மரத்திற்கு (அதுவும் செம்மரத்திற்கு) இருக்கும் மதிப்பு மனித உயிர்க்கு இல்லை என்று!!!😢
#விதயாய், இலையாய், பூவாய், காயாய், கணியாய் இந்த உலகில் நீ எடுக்கும் அவதாரங்கள் பல, இருந்த போதிலும் மக்கள் உன்னை விடுத்து கர்சிலையை கடவுளாக காண்பது ஏனோ?
#கேள்வி பட்டிருக்கிறேன் ஆயுட்காலம் அதிகம் கொண்ட உயிர் நீ தான் என்று, அதனால் தான் என்னவோ பொறாமை கொண்ட இந்த மனித இனம் உன்னை வெட்டி வீழ்த்துகிறது!
#வசிப்பிடம் கேட்ட பறவைகளுக்கு கூடாய், வீடாய் தன்னை முழுவதுமாய் அற்பணித்ததற்கு பெயர் மரம் என்றால்?
அந்த பறவைகளின் இருப்பிடத்தை அழித்து plot போட்டு வாழும் மனிதர்களை என்னவென்று சொல்வது?
#தன்னை வெட்டும் போது மரம் நினைத்ததாம் - ஒருநாள் தனக்கான நீதி கிடைக்கும் என்று.
பாவம் அந்த மரத்திற்கு தெரியவில்லை அதை வெட்டுவதே நீதிமன்றத்தின் மேஜை மற்றும் நாற்காலிகள் செய்வதற்காகதான் என்று!
#வானை நோக்கிய அச்சர்யகுறி போல உன் உருவ அமைப்பு - எனக்கு உணர்த்துவது,
நீ இல்லையேல் புவி நோக்கிய மழை என்றைக்குமே அச்சர்யகுறி தான் என்று!!!!!!!
#இயற்கையின் விந்தை - ஒன்றிற்காகவே மற்றொன்று படைக்கப்படுகிறது. அப்படி படைக்கப்பட்டதே மரமும் - கோடை காலமும்.
#சுயநலமற்ற மரத்தின் நிழலை தேடும் போது சுயநலம் கொண்ட மனிதன் நினைப்பதில்லை அந்த மரத்திற்கு தாம் என்ன செய்தோம் என்று...
#அடி முதல் நுனி வரை இனிமையை தரும் கரும்பை போல, வேர் முதல் சருகு வரை பல நன்மைகளை தரும் மரத்தின் பண்புகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!
#இயற்க்கை வளத்தை அழித்து கட்டிய வீட்டின் மாடித்தோட்டத்தின் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறது இந்த கால தலைமுறைகள்.
#மரத்தால் ஆன புல்லாங்குழல் தரும் இன்னிசையை விட இனிமையானது அந்த மரத்தில் இருந்த பறவைகள் எழுப்பும் சத்தம், அது என்றைக்குமே மெல்லிய மெட்டுக்கள் தான்!
#மனிதனால் உருவாகும் மாசை சுத்தம் செய்ய மனிதனே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைத்து Head, Dy.Head என்ற பதவியும் வகுக்கின்றனர்.
மூடர் கூடத்திற்கு தெரியவில்லை, இயற்கை தந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒற்றை தலைவன் மரம் என்று!
#மரத்தடியில் இலவசமாய் கிடைக்கும் சுத்தமான காற்றை பெரிதாய் பொருட்படுத்தாமல், கோடி கோடியாய் இறைத்து Technology என்ற பெயரில் செயற்கை காற்றை உருவாக்க அழிவை நோக்கி நகர்க்கின்றனர் மக்கள்!
#உனக்கு விட்டுக்கொடுக்கும் மனம் இருப்பதனால் தான் உன்னை வெட்டி எரிகிறார்கள், நீயும் மனிதர்களை போல் பிறர் நலம் பாராமல் சுயநலமாய் வாழ கற்றுக்கொள். அப்போதாவது உனக்கு இந்த பூமியில் இடம் கிடைக்கிறதா என்று பார்ப்போம்!!!
#நீ புயலுக்கு இறையான போதும் உனக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட இங்கு ஆள் இல்லை, உன்னை வைத்து பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் நீ எழுதி வைத்த உன் வயதை கொண்டு (Annual Rings of Tree - மரத்தின் ஆண்டு வளையம்)!
#உரிமைக்காக உனக்கு மனிதர்களை போல போராட்டம் செய்ய தெரிந்ததிருந்தால், உன் போராட்டம் Guiness world record'ல் இடம் பெற்றிருக்கும்!
#மனிதனின் கோர முகம் - மூட நம்பிக்கையின் பெயரால் இறந்த பின்பும் மனிதன் பேயாய் வருகிறான் என்று மரத்தில் ஆணியால் அறைய படுகிறது, அப்போது கூட வலியை மறந்து இடம் தருகிறது அந்த பொய்யான பேய் மரத்திலே ஊஞ்சல் ஆடட்டும் என்று!
#மனிதன் தான் மாண்ட பிறகு விறகை வைத்து எரிப்பத்தின் காரணம் இன்றே உணர்கிறேன்,
உன்னை கொன்ற அந்த மனிதனின் கடைசி நிமிடம் உன்னாலே முடிக்கப்படுவதே இயற்கையின் நியதி!
#மாபெரும் பலன் தரும் மரத்தின் பயன் உணராத மாந்தர்க்கு,
மரம் வெறும் விளம்பர பதாகைகளையும், கட்சி கொடிகளையும் ஏந்தி நிற்கும் கம்பங்களாகவே காட்சியளிக்கிறது!
#நீ ஒரே இடத்தில் இருப்பதினால் உன்னை கை, காலற்ற முடவனாய் பார்க்கிறது இந்த சமூகம்,
கைகளாய் உன் கிளைகள்/விழுதுகள் இருக்க
கால்களாய் உன் வேர்கள் இருக்க
உன்னை கொள்ளும் இந்த நரகத்திலுருந்து நகர்ந்து செல், ஒரு நாள் உன்னை தேடி வரும் இந்த மனித இனம் அப்போது உன் பங்கிற்கு நீ முட்டுக்கட்டை போடாமல் வந்து சேர்...!!!
பின் குறிப்பு;
மக்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்,
மரம் வளர்ப்போம் என்று சொல்ல மாட்டேன்
தானாய் வளரும் மரங்களையாவது விட்டு வையுங்கள் வளரட்டும் அதன் போக்கில்!

$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:27 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 65

மேலே