பௌர்ணமி நிலவே

என்னவளே!
என்னுள்
நுழைந்தவளே!
நீக்கமற நெஞ்சில்
நிறைந்தவளே!
நிலவொளியாய் கண்ணில்
படர்ந்தவளே!
வான்மேகத்தை பரிசாகத்
தந்தவளே!
தென்றலை தூதுவிட்டு தேடிவரச்
செய்தவளே!
தேனாற்றங்கரையில் காதல்
சொன்னவளே!
காதல் சொல்லிய என்
பௌர்ணமி நிலவே!
உன்னைத் தாலாட்ட வருவேன்
முழுநிலவொளியில்...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (20-Jul-21, 10:18 pm)
Tanglish : pournami nilave
பார்வை : 263

மேலே