காதல்
காத்திருந்தேன் உன் கரங்களை பிடித்து மனம் என்னும் சிறையில் கைதியாக காலமெல்லாம் வாழ காத்திருந்தேன் என் அன்புக் காதலா.
உனக்கென காத்திருந்தேன் உன்னையும் அறியாமல்
உனக்கென இடம் வைத்திருந்தேன் என் மனதில் புகுந்து கொண்டாய் நீ
நீ யார் என அறியாமலேயே உன்னை காதலிக்க தொடங்கி விட்டேன் காதலித்தேன் காதலிக்கிறேன் காதலித்துக் கொண்டே இருப்பேன் என் ஆயுள்வரை.
என் ஒவ்வொரு துளி நிமிடமும் என் மனம் உன்னையே சுற்றுகின்றது
என் மனதில் புகுந்து விட்டாய் ஆணிவேராக நீ
உன் மனதில் எனக்கென ஒரு இடம் இருக்கிறதா என் அன்பு காதலா
அதில் நான் எப்பொழுது குடியேறுவது
என் சிந்தனை முழுதும் அதன் மீது வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக.