கரும்பாறை நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘க்’ ‘ற்’ வல்லின எதுகை)
(’ர்’ இடையின ஆசு)

கரும்பாறைத் தண்ணீர் கனசோபை வாந்தி
பெரும்பாடு பித்தசுரப் பீடை - யருந்தயக்க
நீர்க்கடுப்பு தாகமிவை நீக்கிவித்தை புத்தியழ
கேற்கவளர்ப் பிக்குமெய்யை யெண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது சோபை, வாந்தி, பித்தசுரம், பெரும்பாடு, மயக்கம், மூத்திரக் கடுப்பு, தாகம், இவற்றைப் போக்கும்; வீரியம், அறிவு, அழகு இவற்றை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jul-21, 8:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே