அடவி நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அடவிப் புனலால் அதிசீதா திக்கம்
உடலிற் கனப்பிளைப்பும் உண்டாம் - உடல்வயிறு
நாவிவ் விடம்வெதும்பு நண்ணுந் தலைப்பாரந்
தீவவ்வ டற்சுரமாந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் அதிக நீர்ப்பிடிப்பு, உடல் கனத்தல், இளைத்தல், உடல் வயிறு, நா, இவை வெப்பமடைதல், தலைக்கனத்தல், சுரம் இவை உண்டாகும் என்பர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jul-21, 10:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே