இணையக் கல்வி

இயற்கையே கல்வி எனக் கற்ற காலம் முதல் வசந்த காலம்; இயற்கை விஞ்சும் கல்வியறிவு பெற்ற காலம் விண் அதிர்வு காலம்!

காலம் மாறி போச்சு என்ற கூக்குரல்,
ஓலக்குரலாய் நாடு எங்கும்ஒலிக்குது
எங்கு போய் முடியுமோ என்ற அங்கலாய்ப்புத் தெரியுது!

உயிரும் மெய்யும் பெற்றோர் என ஏட்டுப் புத்தகம் சொல்லுது,
உயிர் இல்லா உறவு எல்லாம் உண்மையென இணையுது,
அதை இணைக்க இணையம்
செயற்கை முடிச்சுப் போடுது!

இணை என்ற வேர்ச்சொல்லும்
இலக்கணப்பிழை ஆகுது,
பிழை எல்லாம் சரி செய்ய
இணைய மன்றம்
பட்டிமன்றம் போடுது,
அதில் அறிவிலி கூட்டம் கூடுது!

ஆசான் இருந்து ஐயம் தெளிக்கும் வகுப்பறைகள் மறையுது,
மாயாஜால மத்தாப்புகள் மாணவர் அறிவைக் கொல்லுது,
மின்சாரகொடி கலாச்சாரம்
வகுப்பறையை நடத்துது!

என்ன நடந்தும் ஐயம் தெளிய ஐயன் அறிவு வேண்டாமா-மாயை மயக்க வித்தையெல்லாம் இயந்திர மனிதனுக்குப் போதுமே!

இதை உணர்ந்த அறிவு
வையம் உரைக்கச் சொல்லுமே,
உண்மை அறிவு பிறக்குமே!!!

எழுதியவர் : சோழ வளவன் (23-Jul-21, 11:33 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 195

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே