இதய துதி

தூறும் மழையை தூற்றுகிற
காற்றும்.
அழகே நீ...!
மாறும் மனதை காட்டுகிற
காதலும்.
அழகே நீ..!

நீ இருக்கும் இடமெல்லாம் சென்று
அங்கே...
விடுமுறை எடுக்காமல் நாளும்
அன்புநெறி கற்றுத் தேறுது இதயம்...

நீயும் சேராமல் சென்றால் என்னை.

இதயம் துடித்தெழுந்தெ துதிக்கும்
அடியே உன்னை

தினம் தீதுசெய்து உடலழியும்..
தீத்தூவும் கனவெல்லாம்
பொய்யாகும் நிஜமெல்லாம் ...

பனித்துளியாவும் புகையாக தெரியுதடி..
காலை மாலை தெரியாமல்
காலம் போகுதடி..

உன்னை விடாமல் விரும்பும்
மனம்
விலகாமல் நின்றால் போதும் போதும்...

மறக்க தோனும் போது
மறுக்காமல் அவள் அன்பை
அந்தக் காதல் மீண்டும்
கேட்கும் கேட்கும்...

கன்னிஉன் கடைக்கண் பார்வையால் மகிழ்ந்த
அந்த காலம் மீண்டும்
வேண்டும் வேண்டும்...

கண்ணேஉன் பின்னால்
நடையா நடந்த கால்கள்
நீயில்லை என்றதும்
கிடையா கிடக்குது பாரும்..

(அழகே...)

எழுதியவர் : BARATHRAJ M (24-Jul-21, 9:04 am)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : ithaya thuthi
பார்வை : 110

மேலே