கறுத்த நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கறுத்தசலம் வாந்தி கரப்ப(ன்)வெப்பு காந்தல்
இறுத்தநெஞ்சுக் கட்டிருமல் ஈளை – மறைப்பி(ல்)சுர
நீக்கரிய நெஞ்செரிப்பு நீள்தோஷந் தாகநளிர்
போக்குமன லங்கொடுக்கும் போற்று

- பதார்த்த குண சிந்தாமணி

கறுத்த நீர் வாந்தி, கரப்பான், வெப்பம், எரிச்சல், மார்புச்சளி, காசம், சுவாசம், விடாச்சுரம், நெஞ்செரிச்சல், புளித்தேப்பம், தோடங்கள், தாகம், நடுக்கல் இவற்றை விலக்கும்; பசியை உருவாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-21, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே