உறவுக்கு பெயரிடாதே

அறிந்தவர் என்றேன்,
அதிகம் பேசிவிட்டாய்
தோழமை என்றது...

தோழமை என்றேன்,
கரம் கோர்த்துவிட்டாய்
காதல் என்றது...

காதல் என்றேன்,
ஸ்பரிசம் உணர்ந்துவிட்டாய்
காமம் என்றது...

காமம் என்றேன்,
உடனே அழிந்துவிடும்
வேண்டாம் என்றது...

பாசம் என்றேன்,
விரிசல் விழும்
வீன்வம்பு என்றது...

என்னவள் என்றேன்,
நீயே உனக்கில்லை
உளராதே என்றது...

அவளுறவை என்னுறவு
என்றேன்,
வார்த்தைக்கு மட்டும்
என்றது...

இதையம் திருடிவிட்டால்
என்றேன்,
இனிமேல் இம்சை
என்றது...

எப்படி பெயரிட்டுவேன்
என்றேன்,
பெயரற்ற உறவுக்கே
வாழ்நாள் அதிகம்
என்றது...

எழுதியவர் : தமிழ் வழியன் (24-Jul-21, 6:30 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
பார்வை : 131

மேலே