கால்கூறு - அரைக்கூறு - காய்ந்த வெந்நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காற்கூறு காய்நீராற் காரிகையே பித்தம்போம்
மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரான் - மேற்கூறும்
வாதமொடு பித்தம்போம் வைத்தொருநாட் சென்றுண்கு
ரோதம்போ மோடி யொளித்து

- பதார்த்த குண சிந்தாமணி

வைத்ததில் கால்பாகம் இருக்கும் வெந்நீர் பித்தம் போக்கும்; பாதியிருக்கும் வெந்நீர் வாத, பித்த தோடங்களைப் போக்கும்; இதனை மறுநாள் உண்டால் திரிதோடம் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-21, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே