மன பிரம்மை

மன பிரம்மை


அன்பழகன் கொரோனா தாக்கி; ஒரு வாரமாகவே படுத்த படுக்கையில் கிடக்கிறான்;  கொரோனா காரணத்தால் ஆஸ்பத்திரிக்கு போக பயந்து வீட்டிலேயே; மூலிகை கசாயங்களை குடித்து கொண்டு வருகிறான்; இது நிறையபேருக்கு தெரியாது என்பதை விட தெரிய படுத்தவில்லை என்பதே உண்மை ; காரணம் ஊர் மக்களே தண்டோரா போட்டு விளம்பரம் படுத்தி விடுவார்கள்; பிறகு ஆம்புலன்ஸ் பறக்க ஆரம்பித்து விடும்; என்ற அச்சமும் இருந்தது  இந்த நேரத்தில்

□□ நிலத்திற்கு பாதுகாவலன் அன்பழகன்  தான்;  கடவுள்  பக்தி கொண்டவன்;  கடவுளுக்கு அஞ்சுகிறவன்;  ஞானம்  பெற்றவனாக  திகழ்வான்  என்று  சொல்லி கேட்ட துண்டு;  அப்படிப் பட்டவன்   பத்து நாளாக காயல் படுத்து விட்டான்; பயிர் கதிர் விடும் நேரம்; ஆள் இல்லாததால் ஆடு மாடுகளை மேய  விட்டு விட்டார்களோ என்னவோ;  நம் குலதெய்வம்  அந்த காத்தவராயன் தான் துணை □□என்று புலம்பி கொட்டினாள் அன்பழகனின் அம்மா

சுந்தரியின் வீட்டு எரிபொருள் தீர்ந்து விட்டது  மதிய சாப்பாடு செய்ய முடியாமல் போனதால்,  காலொடிந்த அம்மா;  விறகு பொறுக்கிக்கொண்டு வந்தாவது ; வெளியில் அடுப்பு மூட்டி ; சோறு ஆக்குவோம் என்று; வெட்டுக்கத்தியை, கயிறை   எடுத்துக்கொண்டு நொண்டி நொண்டி புறப்பட்டாள்

□□ அம்மா இங்கே கொடுங்கள்; இன்னும் உடையாத காலையும் உடைத்து கொண்டு வரவா போறீங்க;  நான் போய் வருகிறேன் □□ என்று வாங்கிக்கொண்டு போனாள்

அன்பழகன்  தன்  நிலத்திற்கு வேலிகாத்தான் முள்ளை ஏற்கனவே வெட்டி; வேலி போல்  போட்டு வைத்திருந்தான்; ஆள்  இல்லாத நேரத்தில்  ; ஆடு மாடுகள்  உள்ளே நுழைந்து பயிரை மேய்ந்து விடக்கூடாது என்பதற்காக;  முள்ளை  வெட்டி நாலா பக்கமும் போட்டு வைத்து இருந்த  ; அந்த முள்ளை இழுத்து நறுக்க; கொடுவாளை  ஓங்கினாள்;  அன்பழகன் வந்து □□ ஏய்...நீ அடுப்பு   எரிக்கத்தான் முள் வேலி வைத்திருக்கிறேனா; முதலில் எழுந்திரு□□ என்றான்

அவள் அதை காதுகொடுத்து கேட்கவில்லை; வேண்டும் என்று நறுக்கிக்கொண்டு இருந்தாள்; கிட்டே போனான் வெட்டுக்கத்தியை பிடுங்கி தூரமாக எறிந்து விட்டான்; மீண்டும் காய்ந்த கோம்புகளை கையாலேயே ஒடிக்கச்
செய்தாள்

போனான் அவளை தொட்டு இழுத்து கொண்டு வந்து தூரமாக விட்டான்; அவளுக்கு அழுகை வந்து விட்டது அழுதுக்கொண்டு  விறகு இல்லாமல் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னாள்;  இதற்கு  மேலும்  நான் அங்கேயே  இருந்து இருந்தால்;  அவன் என்னை  இன்னும்  என்ன செய்து  இருப்பானோ  என்று  பயந்து; விறகும்  வேண்டாம்  ஒன்னும்  வேண்டாம்  என்று  உடனே அந்த  இடத்தில் இருந்து  வந்துவிட்டேன்  அண்ணன் மார்களா;□□ என்றது தான்  

அவளோட அண்ணன் தம்பிகள் மூன்று பேர்  தடியும்  அறிவாளுமாக  அன்பழகனின் வீட்டுக்கு வந்து;  □□எங்கே அவன்; அவனை வரச்சொல்லுங்கள் வெளியே; அவனா நானா ஒருக்கை பார்த்து விடுகிறேன்;□□ என்று சத்தம் போட்டார்கள் வெளியில் வரவே இல்லை; இவர்கள் வலிய உள்ளே நுழைந்தார்கள் அவனை இழுத்துப் போட்டு உதைக்க

அப்போது அவனை ஒரு நாட்டு வைத்தியர்;  அவன் உடம்பை பரிசோதனை செய்து கொண்டு இருப்பதை கண்டு  நாட்டு  வைத்தியரிடம் கேட்டார்கள்; □□அவனுக்கு உடம்புக்கு என்ன □□என்று.

□□ இன்றோடு ஒரு வாரம் ஆகிறது ; அவன் எழுந்து நடந்து ;  ஒன்னுக்கு  ரெண்டுக்கு போகக்கூட  அவனால் அப்படி , இப்படி கூட அசைய முடியாது□□ என்றார் நாட்டு வைத்தியர்

அதைக்கேட்டு சுந்தரியின் சகோதரர்கள் ; ஒருவர் முகத்தை ஒருவர்  பார்த்துக் கொண்டார்கள் ; திரும்பி  வீட்டுக்கு வந்தார்கள்;  வழியில் அன்பழகனின் நண்பர்கள் தென்பட்டார்கள்;□□ அன்பழகனை உங்களோடு காணவில்லையே;  எப்போதும்  உங்களை விட்டு பிரியா தவனாச்சே ;  ஏன்  உங்களுக்குள்  சண்டையா  என்ன;  இல்லை   ஊருக்கு போய் விட்டானா□□ என்று ஒன்னும் தெரியாதவர்களைப்போல் ; போட்டு வாங்க  கேட்டார்கள்

□□அவன் பத்து நாளாக உடல்நிலை சரியில்லாமல்; படுத்த படுக்கையாய் கிடக்கிறான்□□ என்றார்கள் நண்பர்கள்

இவர்கள் கண்கூடாக  பார்த்ததும்; நண்பர்கள் சொன்னதும் சரியாக இருந்தது; □□ அடே  நம் தங்கை நம்மிடம்  எதையோ மறைத்து  ஏதோ வேஷம் போடுகிறாள்  , ஒன்று அவளுக்கு  அவன் மேல்  கோபம்  இருக்க வேண்டும்; அல்லது அவள் அவனை விரும்புவதாக இருக்க வேண்டும்; அதற்கு அவனால்  நிராகரித்து இருக்கலாம்; அதனால்  அவள் பேச்சைக்கேட்டு  வீணாக  வம்பில் மாட்டி  இருப்போம்;  அவனை   பழிவாங்க நினைத்து  பொய்யான காரணத்தை
சொல்லி நம்மையே முட்டாளாக்க நினைக்கிறாள் என்று எனக்கு தோன்றுகிறது□□ என்றான் அண்ணன்

□□ ஆமாம் அண்ணா பத்து நாளாக எழுந்திரிக்க நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடப்பவன் ;  நேற்று மட்டும் எப்படி அவளை சந்தித்து இருக்க முடியும்; எனக்கென்னவோ தங்கை மேல்  சந்தேகமாக  இருக்கிறது அண்ணா □□என்றான் தம்பி

□□போய் இரண்டு இழு இழுத்தால்  தான் உண்மையைக் கக்குவாள் என்றான்□□ கடைசி தம்பி

வீட்டுக்கு போனார்கள்  தங்கையை  கண்ணத்தில் அறைந்து  □□ உண்மையை சொல்; நேற்று அன்பழகன் தான் உன்னை தொட்டு இழுத்து விட்டவனா □□

□□ நாம் வணங்கும் தெய்வத்தின் மேல் சத்தியமாகச் சொல்கிறேன் ; நேற்று அவன் தான்  என் கையில்  வைத்திருந்த  கொடுவாளை  பிடுங்கி  தூரமாக எறிந்து விட்டு;   என்னை தொட்டு இழுத்து தள்ளினான் □□

□□ அடியே  பைத்தியக்காரி;  பத்து நாளாக அவன் ஒன்னுக்கு ரெண்டுக்கு போகக்கூட  நெகா இல்லாமல் படுக்கையிலேயே;  கிருந்துக்கொள்வதை நாங்கள் மூனுபேரும் அவன் வீட்டிலேயே கண்கூடாக பார்த்து விட்டு வந்து தான் உன்னை கேட்கிறோம்; ஆஸ்பத்திரிக்கு கூட போக முடியாமல்  நாட்டு வைத்தியரை  வீட்டுக்கு அழைத்து வந்து வைத்தியம் பார்க்கிற நிலையில் கிடப்பவன்; நேற்று உன்னை எப்படி தொட்டு  இருக்க முடியும்; நீ சொல்வதை நம்ப நாங்கள் ஒன்னும் காதில்  பூ  சுத்திக்கொண்டு இல்லை; மரியாதையாக உண்மை என்னவோ அதைச் சொல்□□ என்று  கேட்டார்கள்

அவளால்  இவர்களுக்கு எப்படி  புரியவைப்பது என்று தெரியவில்லை; உடனே பக்கத்தில் கிடந்த கத்தியை எடுத்து தன் கையை அறுத்துக்கொண்டு □□ நான் சொல்வதுதான் சத்தியம்; இதற்கு மேலும் உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா சொல்லுங்கள்; கையை அறுத்துக்கொண்டவளுக்கு; கழுத்தை அறுத்துக்கொண்டு நான் சொன்னது தான் சத்தியம் என்று நிருபிக்க என்னால் முடியும்; உயிரே போனாலும் கவலையில்லை; சொல்லுங்கள் கழுத்தை அறுத்து காட்டவா□□ என்று கத்தியை கழுத்தண்டை கொண்டு போனாள்

□□வேண்டாம்...வேண்டாம்...நிறுத்து□□ என்று  அவள் கையில் இருந்த கத்தியை  பிடுங்கிக் கொண்டார்கள்; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை; நம்பவும் முடியவில்லை அவர்களால் ; ஒரேயடியாக எப்படி சாதிக்கிறாள்  பார்,  இப்படிப்பட்டவள்  யார்  கழுத்தை  அறுக்கவும்  தயங்க மாட்டாள்;  எந்த  தைரியத்தில்  இவள் இப்படி நடந்து கொள்கிறாள்  ஒன்னும்  புரியவில்லையே   என்று  நினைத்துக்  கொண்டார்கள்,  அண்ணன் தம்பிகள் மூன்று பேரும்

இரண்டு நாள் கழித்து  குறி சொல்பவர் ஒருவரை  வீட்டுக்கு அழைத்து வந்து   விஷயத்தை இப்படி,  இப்படி  என்று  சொன்னார்கள்;  அதற்கு குறி சொல்பவர்,  □□ ஆமாம் அவள் சொல்வது நூற்றுக்கு  நூறு உண்மை; அவளிடம் அவன்  நடந்து கொண்டது உண்மை தான்□□  என்றதும்

குறுக்கே நுழைந்து  □□ஏய் பெரிய அண்ணா; என்ன  ஏது என்று ஆராயாமல்; என்னை அடிச்சே...இல்ல;   இப்போது என்ன சொல்லப் போகிறே சொல்,  ஏய்  நடு அண்ணா,  ஏய் கடைக்குட்டி அண்ணா சொல்லுங்க,  கூடப்பிறந்த தங்கச்சி மேல உங்களுக்கு  நம்பிக்கை இல்லை இல்ல,□□

□□ கொஞ்சம்  பொருமா...நான் இன்னும் பூராத்தையும் சொல்லி முடிக்கவே இல்லை  அதற்குள் சந்துலே கெந்து பாயிறே, □□

□□சொல்லுங்க....நீங்க  சொல்லுங்க; அவங்களுக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க□□ என்றாள் சுந்தரி

□□ இவளிடம் வம்பு இழுத்தவன் அன்பழகன் என்பவன் தான்; ஆனால் உண்மையான அன்பழகன் இல்லை, □□

இவன் என்ன மந்திரவாதியா  இல்லை  டுபாக்கூறா  பேச்சை மாத்தி...மாத்தி  பேசுகிறானே என்று அவள் மனதில்  ஓடியது

அன்பழகன் ரூபத்தில்  அவன் வணங்கும் தெய்வம் காத்தவராயன் தான்,  அவன் நிலத்திற்கு காவலாக இருந்தவன்; அன்பழகன் உருவத்தில் அவன் வணங்கும் தெய்வம் காத்தவராயன் தான் உன் தங்கையை வம்புக்கு இழுத்தவன்;  உண்மையில் அன்பழகன் தான்  என்பது உங்க தங்கையோட  பிரம்மை  என்றே சொல்ல விரும்புகிறேன்;  உள்ளுக்குள்  அவனைப்பற்றியே  நினைத்து கொண்டு இருந்து இருக்கிறாள்  என்றே  நமது குறி  எனக்கு  உணர்த்துகிறது; இது உண்மையா  இல்லையா  என்று  கேட்டுச் சொல்லுங்கள்;  உண்மையை மறைத்து  இல்லை  என்றால்  உங்க  தங்கையின்  பொய் சொன்ன  வாய்க்கு  போஜனம்  இல்லாமல்  போகலாம்; அல்லது  ஊமையாகக்கூட  ஆகிவிடலாம்  அதற்கு பொருப்பு  நானாக முடியாது;  என்று  சொல்லிவிட்டு; அவளின் சகோதரர்களிடம்,  அவளுக்கு தெரியாமல்  கண்ணால்  சைகை காட்டினார்    □□  குறி சொல்பவர்

அதைக்கேட்டு அமைதி நிலவியது

□□ என்னம்மா....உண்மையா  இல்லையா;  நீ உண்மையை சொன்னால்  கௌரவம்  குறைந்து விடும்  என்று  பொய்  சொன்னால்  வாய் பேச முடியாமல்  போகலாம்,  நான்  சொன்னது...சொன்னது  தான் □□ என்றார்

கொஞ்ச  நேரம்....   நேரம் எடுத்துக் கொண்டு  யோசித்தாள்  ஒருவேளை  பொய்  சொன்னால்  , குறி பார்ப்பவர்  சோல்வது போல் ஒருவேளை  ஆகிவிட்டால்; உண்மை என  வெட்ட வெளிச்சமாக தெரிந்து விடுமே, பிறகு  நான்  உண்மையை  சொன்னால் கூட யாரும் என்னை நம்பவே மாட்டார்களே   என்று  ஆமாம்  அவர்  சொன்னது  போல்  உண்மை தான் என்றாள்

□□உங்கள் சந்தேகம் சரியே;  ஆனால் அன்பழகன் கொரோனா தாக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறான்,  நீங்கள் நினைத்தால் அவனை இதில் எழுதி இருக்கும் மூலிகை தழைகளைக்கொண்டு கசாயம் வைத்து கொடுத்தால் எமனிடம்  இருந்து அவனை காப்பாற்றி  எமனை வெறும் கையாக  திரும்பி போக வைக்கலாம் ; அதுவும் நீங்கள் நினைத்தால்□□ என்றார் குறி சொல்பவர்

மூன்று அண்ணன் தம்பிகள் ஒரு தங்கை நான்கு பேரும் ஓடினார்கள், ஆளாளுக்கு   ஒரு தழை என கொண்டு போய் கசாயம் வைத்து  கொடுத்தார்கள்; விருந்தும் மருந்தும் மூன்று வேளை என்பார்கள்  அதன் படி அன்பழகன் மீட்கப்பட்டான் ; அன்று முதல் அன்பழகன் மேல் ஒரு இது...சுந்தரிக்கு,

இது  என்றால்  எது.....அதான் காதல் என்பார்களே  அது தான்

□□ என்னை தொட்டானே....போட்டானா...மூனு முடுச்சி□□ என்றெல்லாம்  நெஞ்சிக்குள்  ஓடியது

உதிர்ந்த சிந்தனைகளை  ஒன்று விடாமல் பொறுக்கி சரமாக தொடுத்து அவளை மாலையாக சூடிக்கொள்ள நினைத்தான்  அன்பழகன்

அண்ணன் மார்களுக்கு தங்கையின் உள் நோக்கம் புரிந்தது;  □□ என்னம்மா  உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க  முடிவு  செய்து இருக்கிறோம்  □□

□□மாப்பிள்ளை யாரு □□

□□ வேறு  யாரு  அத்தை மகன் தான் □□ என்று  சும்மா சொல்லிப்பார்த்தார்கள்

□□ அத்தை மகனுக்கு  நான்  மனைவியாக இருப்பதை விட; அன்பழகனுக்கு மனைவியாய்  இருக்கலாம் என்று முடிவு  பண்ணி  மூனு  மாசமாவுது  இதில்   உங்க விருப்பம் எப்படி என்று நான் தெரிந்து கொள்ளலாமா □□ என்று  போட்டாள் ஒரு போடு

□□கல்யாண வயதை அடைந்து விட்டவளுக்கு  , எங்கள் விருப்பம் முக்கியம் இல்லை;  புடிக்காதவனை கட்டிவச்சி மாரடிக்கிறதைவிட;  உனக்கு புடிச்சவனையே கட்டிக்கொண்டு  சந்தோஷமாக இரு□□  என்று கல்யாணம்  செய்து வைத்தார்கள்

அனைவரும் சேர்ந்து  அன்பழகன் நோய்ப்பட்டு  கிடக்கும் வரை நிலத்தை  பயிர்களை  காத்துக் கொண்டிருந்த  காத்தவராயனுக்கு நன்றி கடனை நிறைவேற்றினார்கள்

அவனை விரும்புகிறேன் என்று  நேரடியாக சொல்லி இருக்கலாம்,  இந்த மாதிரி  நாடகம் ஆட வேண்டிய அவசியம் என்ன  என்று நினைத்தான்  அண்ணன்

குறி  சொன்னவரின் மேலும் சந்தேகம் பட்டார்கள்,  ஒரு வேளை  அவரை  பணத்தை கொடுத்து  இப்படி பேச வைத்திருப்பாளோ என்று  இரண்டாவது அண்ணன்,  நினைத்தான்

இந்த கலியுகத்தில் இது போன்ற  அதிசயங்கள்  நடந்தது என்பதை என்னால்  நம்பவே முடியவில்லையே  , தங்கை உழைப்பால்  பிழைக்க முடியாது போனாலும்,  வாயால் பிழைத்துக் கொள்வாள்  இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நினைத்தான் கடைகுட்டி அண்ணன்

ஆபிரகாம் . வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-21, 9:44 am)
Tanglish : mana pirammai
பார்வை : 91

மேலே