சரி சரி அனுசரி

சரி சரி அனுசரி


ஒரு குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகள் நாலு பேர்,  அக்கா, தங்கைகள்  இரண்டு பேராவர்.

இதில்  மூத்தவன்  சாந்தமானவன் , எதையும் அனுசரித்து போகிறவன்;

இரண்டாமவன் தன்னைத் தானே டாட்டா பிர்லா,  பில்கேட்ஸ் 
என்று நினைத்துக் கொள்பவன்;
குறைவான சாதியில் பிறந்துவிட்டு,  அடுத்த இடத்தில் நான் உயர்ந்த சாதி என்று பெருமை அடித்துக் கொள்பவன்;
அவன் வேலை முடிந்ததோ இல்லையோ; மகளீர் கல்லூரி வாசலில் போய் வேக்கு எடுத்த  நாய் போல் நாக்கை தள்ளிக் கொண்டு  நின்று கொள்வான்;

அதற்கு முன் ஆண்கள் பியூட்டி பார்லரில்  சென்று தன்னை அழகு படுத்திக்கொண்டு  வருவது வழக்கம்;
தன்னை  உயர்ந்த சாதி என்று பாவித்து கொள்வது  அது போன்ற பாவனை காட்டுவது;
வீட்டுக்கு ஒரு நயா  பைசா தரமாட்டான்; ஊர்காரர்கள் யாராவது குறுக்கே, நெடுக்கே  தென்பட்டால்;
தலையை  நட்டுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் போய்விடுவது அவன் பழக்கமே.

மூன்றாமவன்  கோள் மூட்டுவது சண்டையை உருவாக்குவது அதை வேடிக்கை பார்த்து கைக்கொட்டி சிரிப்பதே அவனது வேலை; 
பிறர் அன்னியொன்னியமாக பழகுவதை பார்த்துவிட்டால் போதும் ;
அவர்களை பிரித்து வைத்து கைக்கொட்டி சிரிப்பதே அவனது வேலை .

நான்காமவன் விணைப்பூச்சி; யாரையாவது பார்த்தால் போதும்; அட்டைப்பூச்சி போல் ஒட்டிக்கொள்வான்; அவர்கள்  குடியை வாங்கி ஊற்றும் வரை லேசில் விடமாட்டான்.

பெரியத்தங்கை ஒரு  வெட்டிணி  சுடுசுடு என்று பேசி உறவை வெட்டிவிட்டு; திரைப்படம் பார்ப்பது போல்  பார்த்து ரசிப்பது  அவளின் வேலை

கடைசி தங்கை  அவளுக்கு என்று வாங்கி கொடுப்பது எதையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்; மாறாக அடுத்தவர் பொருளை  திருடி உபயோகப் படுத்திக் கொள்வாள்

இரண்டாமவன்  பெற்றவர்கள் என்று இரண்டு ஜீவன் இருக்கிறது; 
அதுக்களை பார்ப்போம் கவணிப்போம் மரியாதை கொடுப்போம்  என்ற அக்கரையே  கொள்வதில்லை;
அவனது உடம்பு திரும்புகிற பக்கம் அவனது நிழல் திரும்புவது போல்;
யாரும் அவனை வணங்கியாக வேண்டுமே தவிர;
நிழல் போகும் திசையில் அவன் போகாதவன்; 
சம்பாதிக்க தெரிந்து கொண்டானே  தவிர;
அதை எப்படி  செலவழிப்பது யாருக் கெல்லாம் செலவழிப்பது என்கிற வெவஸ்த்தையே கிடையாது;
அவனே  ராஜா அவனே  மந்திரி என்ற கணக்கில் வாழ்க்கை ஓடவில்லை;  ஓட்டிக்கொண்டு இருக்கிறான்;
இளம் இரத்தம் இப்போது நன்றாக இருக்கும்;
இரத்தம் சுண்ட ஆரம்பித்து விட்டது என்று வைத்து கொள்;
யாரெல்லாம் நமக்கு ஏதாவது உதவுவார்களா  என்று எதிர்பார்த்து முக்கம் குலைந்தார்களோ;
அவர்களை எதிர்பார்த்து இவன் முக்கம் குலையவேண்டி கட்டத்தில் சுழன்றாக வேண்டிய நிலையை  உணர்வார்கள்; இப்போது உணர்ந்து என்ன பிரயோசனம்; கேள்வியும் அவர்கள் பதிலும் அவர்களாக இருப்பார்கள் .

எல்லோருமே  அடிக்கடி  மூத்தவனிடம் அது சொத்தை அது சொள்ளை என்று சண்டை வாங்கிக்கொண்டு, 
எனக்கென்று யாரும் கிடையாது, 
நான் மானஸ்தன் ஒரு நாயிடம் சவகாசம் வைத்துக் கொள்ள மாட்டேன்;
நான் செத்தாலும் பொழைச்சாலும் ஒரு நாய் கூட என் வீட்டு வாசலை மிதிக்கக்கூடாது;  
அண்ணன் தம்பி அக்கா தங்கை  என்று  ஊறவாட வரக்கூடாது;
என்ற வாய்ப்பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறான்;
அந்த அவனோட மனப்பாடம் என்ன பரிட்சையை சந்திக்கப்போகிறது என்பது; இப்போது அவனுக்கு தெரியாது;
அந்தந்த சமயசந்தர்பங்கள் ஒன்று சேரும் போது ;
தெரிந்து விடும் அதை நினைத்து வருந்தும் போது;
ஒரு அனுபவம் கிடைக்கும் ;
அதுதான் அவனுக்கு அடுத்த பாதைக்கு பயணிக்க  வேண்டிய இடத்திற்கு வழி காட்டும்;
சாலையில் நின்று கொண்டு இருக்கும் பெயர் பலகையைப் போல்.

இந்த சமயம் பார்த்து மூத்தவனின் மூத்த மகளுக்கு கல்யாணம் அமைந்து விட்டது,  ஏற்பாடு செய்யப்படுகிறது;
தம்பிகள் மூன்று பேருக்கும்  தங்கைகள் இரண்டு பேருக்கும்  பத்திரிகைகள் கொடுத்தான்;
ஆனால் யாரும் வரவில்லை;
தேவையில்  ஊர் பெரிய மனிதர்கள் கேட்டார்கள்; □□ மூத்தவரே இங்கே வாங்க, 
இப்படி உட்காருங்க;
எங்கே உங்க சகோதரர் சோதரிகளை காணோம்;
பிள்ளைக்கு தாய்மாமனைக் காணோம் இவர்களுக்கு தெரியப்படுத்த வில்லையா□□ என்று கேட்டார்கள்

□□ இதோ பத்திரிக்கை கையில் கொடுத்து விட்டு வந்தவன் என் மகன் நிற்கிறான்;
அவன் நண்பனிடம்  செல்லைக் கொடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் பத்திரிக்கை கொடுக்கும் போது படம் எடுத்துள்ளான் இதோ பாருங்கள்;
அதுவும் பத்தாமல் போஸ்ட் ஆப்பீஸ் ஸ்பீடு போஸ்டும் செய்துள்ளேன் இதோ அதற்கான ரசீது□□ என்று காட்டினான் மூத்தவன்

□□ சரி உங்க கடமையை நீங்க செய்தும் அவங்க வரவில்லை;
இப்போது எங்களுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது;
அதை நாங்கள் செய்தாக வேண்டும்; அதற்கு உங்க அனுமதி வேண்டும் மூத்தவரே □□

□□ என்ன செய்யனும் சொல்லுங்கள் □□

□□ உங்க அப்பாவுக்கு இப்போது என்ன வயது இருக்கும் □□

□□ கிட்டதட்ட என்பது என்பத்து ஐந்து இருக்கும் □□

□□ காதைக் கொடு □□ என்றார் நாட்டாமை

□□ இப்போது பாருங்கள் அரைமணிநேரத்தில் அல்லது ஒரு மணிநேரம் அவர்கள் அனைவரும் இங்கே வந்து சேருவார்கள் □□

□□ எனக்கு நம்பிக்கை இல்லீங்க □□

□□ நான் சொன்னது போல் நடக்கவில்லை என்றால், இந்த ஊர் மக்களால் நாட்டாமையாக நியமிக்கப்பட்ட  நான் நாட்டாமையாக இருக்க லாயக்கு இல்லாதவன்  என்று அர்த்தம் உடனே எனக்கு கொடுத்த பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன் □□ என்றார்

நாட்டாமை சொன்னது போல் அழுதக்கண்ணும்,  கைகளில் பூமாலைகளுடனும் , கோடித்துணிகளுடனும் வந்து சேர்ந்தார்கள்
உறவினர்கள் அனைவரும் 

ஊர்மக்கள்  அவர்களை தாளி தாளியென்று தாளித்துவிட்டார்கள்,  யாராலும் கீச்சு மாச்சு என்று மூச்சு விடவில்லை 

□□ சரி சரி  அனுசரிங்க ....போதுமா மூத்தவரே  புறப்படுங்கள் மணவரைக்கு ஐய்யரே ஸ்டார்ட்,  □□ என்றதும் சிரிப்பொலி ஒலித்துக் கொண்டு தாலி கட்டியாகிவிட்டது

□□ நாட்டாமை....நாட்டாமை.....நாட்டாமை...□□
என்று  மூச்சிறைக்க ஓடிவந்து...□□ நாட்டாமை எங்க தாத்தா செத்துட்டாரு......உங்களுக்கு  இப்போது சொல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள்,  என்னால நிற்க முடியலை,  யாருக்கும் தெரியாமல் ஓடிவந்து விட்டேன் நாட்டாமை □□ என்றான்  பொடியன்

□□ ச்சா....பிரிந்து கிடந்தவர்களை ஒன்று சேர்க்க , ஆடின ஒரு சின்ன நாடகம் தோத்து போய்விட்டதே□□ என்று வருந்தினார் நாட்டாமை;  □□ மூத்தவரே.... விளையாட்டுத் தனமாக  பண்ணது விணையமாகிவிட்டது, 
எதார்த்தமாகத் தான் செய்தேன்.□□என்றார் நாட்டாமை

□□ யானைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே,    அந்த ஓசை உங்களுக்கு கேட்டு இருக்கிறது அதாவது  சாவு வரும் பின்னே அதற்கான  அறிகுறி  வரும்  முன்னே  அதை அறிந்து  சொன்னீர்கள் இதில் வருந்த ஒன்னும் இல்லை, வருந்தாதீர்கள்□□ என்றார் மூத்தவர் 

கல்யாணம் நடந்தது □□ எல்லாரும் சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்தார்கள்; இப்போது அழ வேண்டிய நேரம் அழுதே தீர்க்க வேண்டும் □□ என்றார் மூத்தவர்

பாடையில் வைக்க பிணத்தை நாலுபேர்கள் தூக்கினார்கள்; □□ டேய்...டேய்...எங்டா கொண்டு போய்ப்  போடப்  போறீங்க என்னை ,  நாலுபேரா கூடி என்னை தூக்குறீங்க,  விடுங்கடா நான் என் பேரப்பிள்ளை கல்யாணத்திற்கு போகனும் □□ என்றவாறு எழுந்து நின்று அந்த நாலுபேரையும் ஓடி ஓடி அடிக்கிறார் தாத்தா

□□ மணப்பெண்.....தாத்தா....தாத்தா...□□
என்று ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதாள்

□□ ஒரு தடவை நிம்மதியான இடத்தை தேடி போய் தனியாக  கொஞ்சம் நாள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதுண்டு; அதற்கு எனது பேரன் அதாவது  எனது மூத்த மகனின் மகன் சொன்னான் □□

□□ நிம்மதியான இடம் எனக்கு தெரியும் தாத்தா  என் கூட வாங்க காட்டுகிறேன் என்றான் அப்போது அவனுக்கு வயது ஆறு,  சரியென்று அவனை காட்டச்சொன்னேன் ; எதைத்தான் காட்டுகிறான்  என்று பார்ப்போம் என்று, எனது சுண்டுவிரலைப்பிடித்து இழுத்துக் கொண்டு போனான் காட்டினான், 

□□ எதைக்காட்டினான் □□என்று இருந்தவர்கள் எல்லோரும் ஆவலுடன்  கேட்டார்கள்

□□ சுடுகாட்டை  , அந்த சுடுகாட்டை அப்போதே என் பேரன் காட்டிவிட்டான்,  எப்போதோ  தெரிந்து  கொண்ட சுடுகாட்டை இவர்கள் மருபடியும் இப்போது  காட்டப் பார்க்கிறார்கள் அதனால் தான் அடித்து விட்டேன்  மன்னித்து விடுங்கள் □□ என்றார் தாத்தா

எல்லார்  முகதிலும்  ஒரே ஆனந்தம்  தாண்டவமாடியது

அதன் பிறகு  தொன்னூற்று இரண்டுவரை உயிர் வாழ்ந்து பிறகே உயிரை விட்டார் தாத்தா


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-21, 9:56 am)
பார்வை : 69

மேலே