அசரீரி உசுரீரி

அசரீரி உசுரீரி
குட்டிக் கதை

ஏங்க அந்த ஆளு அவன் செருப்பை கழட்டி அவனையே அவன்  அடித்து கொள்கிறானே  ஏன்? வேறு யாரையும் அடிக்க முடியாததாலேயா?

அட நீ ஒன்னு; அவனோட பொண்ணு இதே ஊர் பையன் எவனையோ காதலிக்கிறா போல இருக்கு; அம்மா இல்லை; அப்பாவால மகளை விசாரிக்க முடியல; அதனால் அடுத்த ஊர்ல அவனோட சொந்தக்காரர் வீட்டில் விட்டு வைக்கலாமுன்னு அழைத்து கொண்டு போனார் 

போகும் வழியில் ஒருவர் அப்பனும் மகளும் பெட்டியோடு  எங்கே கிளம்பிட்டீங்கன்னு கேட்டு இருக்கிறார்

இந்த மாதிரி விஷயம் அதனால்    அவளுக்கு கல்யாண   ஏற்பாடு ஆகிற வரையிலும்   என் சொந்தக்காரர் வீட்டில்  விட்டு வைக்கலாமுன்னு அழைத்து கொண்டு போறேன் என்றார்

அதற்கு வாய் சும்மா இருக்கமாட்டாமல்;  " ஏம்பா நீ உன் பெண்ணை கொண்டு போய் விட இருக்கும் அதே ஊரில்; உனக்கு மட்டும் தான் சொந்தக்காரர் இருப்பாங்களா; உன் மகளை காதலிக்கிறவனுக்கு;  அதே ஊரில்  சொந்தக்காரர்கள் இருக்க மாட்டாங்களா;  நீ கொண்டு போய் உன் மகளை விடுவது போல்; அந்த பையனோட அப்பா அம்மா அவனை கொண்டு போய் விடமாட்டார்களா; இங்கேயே இருந்தால் உனக்கு பயந்தாவது கிருமமாக இருக்க வாய்ப்பு இருக்கு; அங்கே கொண்டு போய் விட்டா; அவிழ்த்து விட்ட ஆடு மாடுகளை போல வேலிதாண்டி அடுத்தவங்க பயிரில் மேய்ந்து சண்டை வாங்கி வைக்காதா;  அவங்க இரண்டு பேரும் எந்த பயமும் இல்லாமல் ஃபிரி  ஆயிட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் ; அப்போது நீ தான் அவங்களை சேர்த்து வைத்தது போல் பேச்சு வராதா என்று கேட்டுவிட்டார்  அதனால்

"அதனால் "

அவனுக்கு வந்த இந்த யோசனை எனக்கு ஏன் வராமல் போச்சின்னு அவரோட செருப்பை கழட்டி அவரையே அவர்  அடித்து கொள்கிறார் அவ்வளவுதான்

" பிறகு  என்னாச்சு "

" பாதி வழியிலேயே திரும்பி  மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்" அவ்வளவுதான்

இரண்டு நாள் கழித்து  அந்த புத்தி சொன்னவரை சந்தித்து  " ஐயா நீங்க சொன்னது போலவே; நான் என் மகளை கொண்டு போய் சொந்தக்காரர் வீட்டில்  விட இருந்த அதே ஊரில்  அந்த பையனை அவங்க சொந்தக்காரர் வீட்டில் கொண்டு போய் விட்டு இருப்பது தெரிய வந்தது;  ஐயா உங்க வாய் சொல் பலிச்சிடுச்சிங்க; உருவம் காட்டாமல் சொல்லக்கேட்டால் அது அசரீரி என்பார்கள்; உருவம் காட்டி சொல்லக்கேட்டேன் இது உசுரீரி என்று சொல்ல ஆசைப்படுகிறேன்   ரொம்ப நன்றிங்க ஐயா"  என்றார்


சந்தேகம் என்பது உண்மையை பொய்யாக்கிவிடும்; பொய்யை உண்மையாக்கி விடும்; உன் மண்டையை குழப்பி பணியாரம் சுட்டுவிடும்; கண்டவர் வாயில் அசை போட வைத்து விடும்; பணியாரத்தின் தராதரத்தை சொல்வது போல்; நம் தராதரத்தை தெரு சிரிக்க வைத்து விடும் விழிப்பாயிருங்கள் என்று அனுப்பி வைத்தார் புத்தி சொன்னவர்


ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-21, 10:03 am)
பார்வை : 48

மேலே