பொன் நகை புண் நகை

பொன் நகை புண் நகை


□□ பத்து பவுன் மிஞ்சி மிஞ்சி போனால் பதினைந்து பவுன் ஊர் முறைப்படி பொண்ணுக்கு போடுவது நடைமுறை;
ஐம்பது பவுன் கேட்கிறார்கள்,  அதிலும் பொண்ணை கர்பவதியாக்கிவிட்டு; இதுவும் ஒருவகையான டெக்னிக்கோ  என்னவோ  தெரியவில்லை; இப்படி கேட்டால் எப்படி, முடியாது என்று சொல்ல முடியும் என்றோ என்னவோ; நாம் பெத்ததே நம்மை மதிக்காத போது; விலாசம் தெரியாதவர்கள் நம்மை எப்படி மதிப்பார்கள்; மதிப்பை எதிர் பார்ப்பது நம் தவறு;   சரி நிலத்தை வித்து செய்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்,  இன்னும் எங்களைவிட வசதியில்லாதவர்களின்  பெண்களிடமும் வரப்போகும் மாப்பிள்ளைமார்களும் அவங்க இப்படி செய்தார்கள்; இவங்க இப்படி செய்தார்கள்;  அதேபோல்  நீங்களும் அப்படி செய்துவிட்டு போங்கள் என்று  எதிர்பார்த்தால்; அவர்கள் எங்கே போவார்கள் மாறாக சாபனையா விடுவார்கள்,  எங்கே கொள்ளை அடித்தானோ; யார் குடியை கெடுத்தானோ; யார் வயிற்றில் அடித்தானோ;  யார் கழுத்தை அறுத்தானோ என்று.  ஐம்பது பவுன் போட்டு இருக்கிறவங்க கழுத்தை அறுக்கிறானுவ□□ என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் தங்கை தன் அண்ணனிடம்

□□தங்கச்சி ....பொண்ணும்; வாயும் வயிறுமாக  இருக்கிறாள்; முடியாது என்றும் சொல்ல முடியாது; எப்படியாவது செய்து தான் ஆகவேண்டும்; வேற பேச்சிக்கு இடமே இல்லை,  மாமாவிடம் சொல் கையை கடிக்கும் பட்சத்தில் நிலத்தை அடமானம் போட்டோ அல்லது விற்றோ பண்ணித்தான் ஆகவேண்டும்; இது ப்ளானோடத்தான் பண்ணுவது போல் எனக்கு தெரியவருது; என்ன செய்ய முடியும்; போய் ஆகவேண்டியதை பார்; பெண்ணுக்கு தாய் மாமன் என்ற முறையில் நான் அஞ்சி பவுன் வாங்கி தாரேன்,  பத்தாகூட வாங்கி தருவேன்
என் பிள்ளைக்கு நல்லது கெட்டது நடக்கும் போது உனக்கு தான் கஷ்டமாக இருக்கும் திருப்பி செய்வதற்கு அதனால் பார்க்கிறேன் தங்கச்சி □□என்றார் அண்ணன்

□□நீங்கள் சொல்வதில் தப்பு இல்லை அண்ணா,  முதலில் நிலத்தை விற்று தான் ஆகவேண்டும், ஏனென்றால் அடமானம் வைத்தால் நாம் கேட்கும் பணம் கிடைக்காது,  அது பத்தாமல் போனால் சொல்றேன் அப்போது நீங்க சொன்னதை செய்யிங்கள் அண்ணனா□□ என்றாள் தங்கை

அந்த நாள் வந்தது , கல்யாணம் முடிந்தது, பையனுக்கு கேட்டது எல்லாம் கிடைக்க பெருமகிழ்ச்சி
கொண்டனர், ஆனந்த வெள்ளத்தில்
மூழ்கி இருந்தனர்

பெண்ணையும் மாப்பிள்ளையும்  பெண்ணின் தாய்  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, சொந்த காரில் மாப்பிள்ளை தோழனும், பெண் தோழியும்,  இவர்களுக்கு பாதுகாப்புக்கு இரண்டு பேரையும் அனுப்பி வைத்தார்கள்

பாதி வழியில் காருக்கு தீனிபோடாததால்,  பசியால் வாடி நின்று விட்டது, துணைக்கு அனுப்பிய ஆட்கள் எரிபொருள் வாங்கி வர அனுப்பப் பட்டனர்

அப்போது மூன்று முகம்மூடிகள் காரில்  வந்தனர்,  துப்பாக்கியைக்காட்டி, மிரட்டி  நகைகளை பிடுங்கிச் சென்றனர், என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியவில்லை,  எரிபொருள் வந்தது,  தலை ஒரு வேஷமும்,  துணி ஒரு வேஷமுமாக இருக்கக்கண்டு திகைத்துப் போயினர்

இந்த கோலத்தோடு மாமியார் வீட்டுக்குப் போக மனமில்லாமல் திரும்பி வந்துவிட்டனர்,  அப்பா கேட்டார்கள்,  நடந்ததைச் சொன்னார்கள்,  தலையில் அடித்துக் கொண்டார் அப்பா, □□ அந்த ஐம்பது பவுன் நகை இருபத்து ஐந்து லட்சத்தைக் கொண்டது அதைவைத்து கடனை அடைத்து விடலாம் என்று சந்தோஷமாக இருந்தேன்; எல்லாவற்றிலும் மண் விழுந்து விட்டதே,  இருக்கும் வீடு நிலம் எல்லாம் ஏலத்தில் போகப்போகிறது; இனி தெருவே கதி தான்; □□என்று நினைத்து  புலம்பி அழுதுக் கொண்டிருந்தார் அப்பா

பெண் வீட்டில் இருந்து போன் வந்தது
□□பொண்ணு மாப்பிள்ளை இன்னும் வீடுவந்து சேரவில்லை,  அவர்கள் புறப்பட்டு விட்டார்களா,  இல்லை இனிமேல்தான் புறப்பட வேண்டுமா
நாங்கள் விருந்துக்கு உண்டான எல்லாவற்றையும் செய்து அவர்கள் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் □□என்றார்கள்

போனில் பெண் வீட்டார் சொன்னதைக்கேட்டு  குபீரென்று அழுது , போனை  தன் மனைவியிடம் கொடுத்து விட்டு குந்தி அழலானார்  அப்பா

அம்மா சொன்னார் □□பெண்ணும் பையனும் புறப்பட்டு போய், பாதிவழியிலேயே, திரும்பி வந்து விட்டாங்க □□

□□ஏன்? என்னாச்சி...ஏன்? திரும்பி போனார்கள், எதையாவது மறந்து வந்து விட்டாங்களா என்ன?□□

□□பிள்ளைகள் உயிர் தப்பி வந்ததே அரிதாகி போச்சிம்மா□□ என்றார்

□□ஏன்? என்ன ஆச்சி அவங்களுக்கு □□

□□எப்படி சொல்றது என்று தெரியவில்லைங்க □□

□□ஏன்? ஏதாவது அடிகிடி பட்டுவிட்டதா என்ன?□□

□□இல்லைங்க  பிள்ளைகள் போட்டுக்கொண்டு போன நகைகளை
கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டாங்கலாம் □□

□□என்னது என்ன சொல்றீங்க □□

□□ஆமாங்க  எப்படி வயிறு எரிந்து கொடுத்தீங்களோ,  அப்படியே எவனோ உருவிக்கிட்டு போயிட்டானுங்கம்மா □□

□□இவள் சொல்வது உண்மையாக இருக்குமா, இல்லை இன்னும் எதாவது சுருட்ட  போடுகிற நாடகமா என்று தெரியவில்லையே என்று நினைத்து,  இங்கே பாருங்கள் நாங்கள் ஒன்னும் வயிறு எரிந்து கொண்டு நகைநட்டு போடவில்லை,  பிள்ளைக்கு வாழ்க்கை அமைய வேண்டும் என்று கொடுத்தது, என்பதை நினைவில் வையுங்கள், வாங்கிக்கொண்டு போனதை ஒழுங்காக பாதுகாக்க துப்பு இல்லை,  வந்துட்டா குறை சொல்ல□□ என்று நினைத்து போனை கட் பண்ணி தன் அண்ணனிடம் பேசினார்,  அண்ணனிடம் விஷயத்தை சொன்னாள்  பெண்ணின் அம்மா

□□சரி நகைகள் போனால் போகட்டும் நீ ஒன்னும் கவலைப்படாதே, போனை வை  நான் அவங்க  வீட்டுக்கு போய்  வறேன் பிறகு பேசலாம்□□ என்றார் அண்ணன்

□□அண்ணன் போனதும் தங்கையின்  மகள் அழுதாள், எல்லாம் என்னால் தான்  நான் ஒழுங்காக கிர்மமாக பெற்றோர்கள் சொல் பேச்சை கேட்டு நடந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து இருக்குமா பெண்புத்தி பின் புத்தி என்று சரியாகச் சொல்லி வைத்து இருக்கிறார்கள் மாமா □□

□□சரி.....அழாதே....கண்ணைத்துடை...மாப்பிள்ளையின் பெற்றோர்களை பார்த்து இப்படித்தான் ஆச்சே போலீசில்   பிராது கொடுத்தீங்களா □□

□□இல்லைங்க அவங்க ஐம்பது பவுன் எப்படி வந்தது  எங்கிருந்து வந்தது ரசீது  இருக்கிறதா காட்டச் சொல் வார்கள் □□

□□அப்படி கேட்கும் பட்சத்தில் எங்களிடம் வந்து வாங்கிக்கொண்டு போய் இருக்கலாமே □□

□□ ஐயா போனது போகட்டும் நான் யாருக்கும் தெரியாமல்  எல்.ஐ.சி. போட்டு வைத்து இருந்தேன் அது இப்போது கைக்கு வரும்,  என்மருமகளுக்கு குறைந்தது பத்து பதினைந்து சவரனாவது முதலில் வாங்கி நீங்கள் மறுபடியும் போட்டது போல் போட்டு விடுகிறேன்,  அதுவரை அமைதியாக இருங்கள், யாரிடமும்
சொல்லாமல் இருங்கள், உங்க தங்கை இடம் கூட சொல்லாதீர்கள்,  இந்த டீல் நம்ம இருவருக்குள்ளேயே இருக்கட்டும்,  யாரிடமும் கலக்க மாட்டேன் என்று ஒரு நம்பிக்கைக்கு சத்தியம் செய்து கொடுங்கள்,  என் மருமகளுக்கு கூட தெரியக் கூடாது  என்ன சொல்றீங்க □□

□□உங்களை நான் சந்திக்கவே இல்லை,  நீங்க என்னிடத்தில் எதையும் சொல்லவே இல்லை, போதுமா, இப்போது மாப்பிள்ளையையும் உங்க மருமகளையும் என்கூட அனுப்பி வையிங்கள் □□, என்றார் பெண்ணின் தாய் மாமன்

□□இல்லைங்க...அது...மரியாதை இல்லீங்க....அங்கே இருந்து...ஜிகு ஜிகுன்னு வந்த மருமகள் எனக்கு மரியாதை சேர்த்து கொடுத்தாள் அப்படி பட்டவளை வெறும் கழுத்தாக அனுப்பி அவளின் கவுரவத்தை தலைகுனிய வைப்பது ஞாயம் இல்லை இன்னும் பத்து பதினைந்து நாளில்  பணம் வந்துவிடும் நகையை வாங்கி போட்ட பிறகு நானே உங்களுக்கு சொல்கிறேன் வந்து அழைத்துக் கொண்டு போங்கள்□□ என்றார் பெண்ணின் மாமனார்

□□அப்புறம் உங்க இஷ்டம்,  நீங்க இவ்வளவு சொல்லி நான் கேட்கவில்லை என்றால் அது அவ்வளவாக நல்லா இருக்காது அப்போ நான் புறப்படுகிறேனுங்க □□

□□இவ்வளவு தூரம் வந்துவிட்டு கையை நனைக்காமல் போனால் எப்படி,  வாங்க வீட்டுக்கு போகலாம்,  நான் சொன்னது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்,  நகையை வாங்கி கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் உங்களிடம் கொடுப்பேன்
நீங்கள் மறுபடியும் எடுத்து போட்டு அனுப்பியது போலவே இருக்கட்டும்□□ என்றார் மாப்பிள்யின் அப்பா

□□கடவுளுக்கே தெரியவிடாமல் பார்த்து கொள்கிறேன் கவலையை விடுங்கள் வீடு நெருங்கி விட்டது,  வேறு எதையாவது பேசுங்கள்□□ என்றார் பெண்ணின் தாய்மாமன்

உணவருந்தி பின் புறப்பட்டார் பெண்ணின் தாய் மாமன்

□□தங்கச்சி முதல் முதலில் அபசகுனமாக ஏதோ நடந்து விட்டதாம்,  அதனால் அவர்கள் மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் உயிர் தப்பி வந்தவர்கள் அவர்களுக்கு ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்களாம் அது முடிந்ததும் நானே அவர்களை அழைத்து கொண்டு வருகிறேன் என்று சொன்னார்கள்  எனக்கு சரியாக பட்டது அதனால் வந்துவிட்டேன்□□ என்றார் அண்ணன்

□□அதுக்கென்ன எனக்கும் சரியாகத்தான் படுகிறது இருக்கட்டும் அவர்கள் இஷ்டப்படி விட்டு விடுங்கள் அண்ணா□□ என்றாள் தங்கை

□□தங்கச்சி நான் என்னால் முடிந்த வரை பணம் கொடுக்கிறேன்,  உன்னிடம் நிலத்தை வாங்கியவனுக்கு ஏதோ தலை சுமை வந்து விட்டது  போல் தெரிகிறது,  உன்னிடம் இருந்து வாங்கிய நிலத்தை வேறு யாருக்கோ விற்க போவதாக சேதி கிடைத்தது,  அதனால் நீயே அதை வாங்கி வை,  நமது கொடுக்கல் வாங்கலை பிறகு பார்த்து கொள்ளலாம், அப்படியே உம்மால்  கொடுக்க முடியாமல் போனாலும்,  பரவாயில்லை  நீ எனக்கு யாரு  என் கூடப் பிறந்த தங்கை  அதை விட்டுக் கொடுக்க வில்லை என்றால் நான் அண்ணனாக ஏற்பட்டு என்ன பிரயோசனம் சொல்லு □□ என்றார் அண்ணன்

□□ அண்ணன் சொல்வதைக் கேட்டு புல்லரிக்க  ஆனாள்,  அண்ணா  அப்படி என்றால் என் பெயருக்கு எதற்கு உங்க பெயருக்கே வாங்குங்களேன், அதில் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை □□என்றாள் தங்கை

□□ இல்லம்மா.....என் மனைவி ஏங்கே அவளின் அம்மா வீட்டுக்கு கொண்டு போய்விடுவாளோ என்கிற அச்சம் எனது உள் மனதை தட்டி எழுப்புவது போல் தெரிகிறது, இப்போது நான் சொன்னதை அவளிடம் சொல்லிவிடப் போகிறாய்,  அதனால்.....□□

□□அப்படி என்றால் உங்க விருப்பப்படியே செய்யுங்கள்; ஏனென்றால் நல்ல வாயன் சம்பாதித்து நாறவாயன் தின்னு பார்க்க என்பது போல் ஆகிவிட கூடாது இல்லையா,  அப்படியே ஒன்று ஆகிவிட்டால் என்னைத்தான் நிந்திப்பீர்கள்,  அதனால் நான் அறிவுரை கூற விரும்பவில்லை அண்ணா  □□என்றாள் தங்கை

மகளின் கல்யாணத்திற்கு எதை எதையெல்லாம்  இழந்திருந்தாளோ அவை அனைத்தையும் மீட்டுக் கொடுத்தார்  அண்ணன்

பிள்ளைகள் கவனத்திற்கு கொண்டு வந்து விலாவாரியாக சொல்லி வைத்து இருந்தாள், □□ நாம் உங்களது அக்கா திருமணத்தை ஒட்டி நிலத்தை  விற்று விட்டோம்,  வாங்கியவனுக்கு ஏதோ தொல்லை போல் தெரிகிறது, அதை அவன் வேறு இடம் விற்க போவதை  உங்க மாமா விரும்பவில்லை,  இந்த இடத்தை வாங்க உங்க அப்பா என்னென்ன கஷ்டங்களை தாங்கி இந்த இடத்தை வாங்கினாரோ ,  அந்த கஷ்டமெல்லாம் வீணாக போய் விடுமே என்று,  உங்க மாமா வாங்கி என் பெயருக்கே எழுதுகிறார் □□

□□ஏம்மா அவர் பணம்;  நிலத்தை அவர் பெயருக்கே எதுதிக்கொள்ள சொல்ல வேண்டியது தானே□□ என்றான் மகன்

□□ அதாவது அவர் மனைவிமேல் அவருக்கு நம்பிக்கை இல்லை,  எனக்கப்புறம் என்பிள்ளை அநாதையாக விட்டு விட்டு அவளின் அம்மா வீட்டுக்கு கொண்டு போய்விடுவாளோ என்கிற பயம் அவருக்கு இருப்பதை அவரே என்னிடம் சொன்னார் அதனால் நானும் ஒத்துக் கொண்டேன்□□ என்றாள் தாய்

□□ சரிமா அவருக்கு தேவைப்படும் போது அவர் பெயருக்கே திருப்பி விடலாம்,  அவர் இல்லாமல் போய்விடும் தருணத்தில் அவரோட பிள்ளைகள் பெயரில் மாற்றி தந்து விடுகிறோம்□□ என்றார்கள்

□□ இதைத்தான் சொல்ல வந்தேன் உங்களுக்கு புரிந்து விட்டது இனி எனக்கு எந்த கவலையும் இல்லை□□ என்றாள் அம்மா

மாப்பிள்ளையும் மகளும், மகளுக்கு மாமனாரும் காரில் வந்து இறங்கினார்கள், உணவு பரிமாறப்பட்டது அன்றே அவர்கள் போயாக வேண்டும் என்று சொன்னார்கள், அதனால்  அண்ணன் பதினைந்து சவரன் நகைகளோடு வந்தார், பெண்ணுக்கு போட்டு விட்டு
□□ இதையும் தொலைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் நேரம் கெட்ட நேரத்தில்; நகைநட்டுகளை போட்டுக் கொண்டு வெளியில் தனியாக   போகாதீர்கள்; என்ன சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ; என்னங்க சந்தோஷம் தானே□□ என்று தங்கை மகளின் மாமனாரிடம் கேட்டார்

□□ எதுக்குங்க,  முதலில் பேராசையால் தெரிந்தோ தெரியாமலோ  கேட்டு விட்டேன்; எனது பேராசை பெரும் நஷ்டத்தை உருவாக்கும் என்பதை பட்டு தெளிந்துவிட்டேனுங்க, உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்,  பெண்கேட்டு வருகிற என்னைப் போன்ற  பேராசை வெறிபிடித்த நாய்களாக அமையக்கூடாது என்று நான்வணங்கும் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேனுங்க; நானும் எத்தனையோ தடவை இந்த வழியே போயிருக்கேன் வந்து இருக்கேன்; இது போன்ற சம்பவத்தை என் வாழ்க்கையில் கண்ணால பார்த்ததும் இல்லை; இப்படி நடக்கிறது என்று காதால கேட்டதும் இல்லைங்க □□ என்றார் தங்கையின் சம்மந்தி

□□ ஐயோ அதைவிடுங்க பிள்ளைகள் இரண்டும் உயிர் பிழைத்து வந்ததே அது போதும்,  எதையும் நாம் வரும்போது கொண்டுகிட்டு வரவில்லை,  போகும் போதும் அதை கொண்டுகிட்டு போவதில்லை என்பதை உணர்த்தியது நமக்குங்க□□ என்றார் பெண்ணை பெற்ற தாய்

□□ ரொம்ப சந்தோஷமுங்க நாங்கள் புறப்படுகிறோம், அம்மா மருமகளே,  போட்டுக்கொண்டிருக்கும் நகைகளை கழட்டி உள்ளே வைம்மா,  நாம் போகும் பாதை மோசமான பாதை இருட்டுவதற்கு முன் போயாக வேண்டும் புறப்படு□□ என்றார் மாமனார்

□□ அண்ணா... நடப்பதையெல்லாம் பார்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கிற மாதிரி இருக்கு அண்ணா,  ஏதோ அதிசயம் நடப்பது போல் தோன்றுகிறது அண்ணா □□

□□ சில நேரங்களில்  சில மனிதர்களுக்கு ; சில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கிறதும்மா,  அதை உணர்பவர்கள் தப்பித்து கொள்ளலாம்,  உணராதவர்கள் மாட்டிக்கொண்டு வேதனையை அடையலாம் , இதுதான் வாழ்க்கை,  இதுதான் பயணம் என்று சொல்கிறார்களம்மா, சரி நான் போகிறேன், □□

□□ அண்ணா உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை,  எப்போதும் போய் விட்டு வருகிறேன் என்று சொல்லுங்கள்□□ என்றாள்

□□ ஓ...அப்படியா சரி போய்ட்டு வருகிறேன்□□ என்று சொல்லி விட்டு புறப்பட்டார்

□□ஒரு நிமிடம் அண்ணா...கேட்கிறேனே என்று  என்னை தப்பாக நினைக்க வேண்டாம்; என்மீது கோபப்படவும் வேண்டாம்;□□

□□ என்ன சொல்லும்மா  நான் உன்னை தப்பாக நினைக்கிற மாதிரியும்,  கோபப்படுகிற அளவுக்கு அப்படி என்ன கேட்கட்போகிறே,  என்ன விஷயம் சொல்லு □□

□□ இரண்டு நாளைக்கு முன்பு எனக்கு இதயத்தில் ஒரே வலி; எப்படியோ,  அதை இதை தடவ சரியாக ஆகிவிட்டது,  ஒருவேளை எனக்கு ஏதாவது,  ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எனக்காக எவ்வளவு செலவு செய்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை,  என் பிள்ளைகளுக்கு சொல்லி வைப்பேன் மாமாவிடம் இவ்வளவு வாங்கி இருக்கிறோம்,  இவ்வளவு அவருக்கு கொடுக்க கடன்பட்டுள்ளோம்,  என்று சொல்லி வைப்பேன்,  தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயி வயிறு வேறு வேறுதானே அதனால் கேட்கிறேன் அண்ணா□□ என்றாள் தங்கை

□□ நான் என் சொந்த பணத்தை எடுத்து உனக்கு கொடுக்க வில்லை,  உனக்கு கொடுத்தது எல்லாம் உன் பணம்தான்□□ என்றார் அண்ணன்

□□அது எப்படி?□□

□□ நீ நிலத்தை விற்று உன் பெண்ணுக்கு ஐம்பது பவுன் நகைப்போட்டாய்,  அதை அவர்கள் இடம் இருந்து கொள்ளை அடித்தது வேறு யாரும் இல்லை  நான் தான்,  நகையை பறி கொடுத்து விட்டதால்,  உனக்கு பயந்து உன் மகளும் மருமகனும்  திரும்பி அவங்க வீட்டுக்கு போய் விட்டார்கள்,  அப்போது நான் போய்  விசாரித்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டுப் போனேன்;.......

........ அப்போது உன் மகளோட மாமனார்; என்னிடம் விலாவாரியாக என்னை தனியாக அழைத்து கொண்டு போய்  சொன்னார்,  சொல்லி விட்டு,  அவர் யாருக்கும் தெரியாமல்  எல்ஐசியில் போட்டு வைத்து இருந்த பணம் கிடைத்தது;  கிடைத்த பணத்தில் பதினைந்து பவுன் நகை வாங்கி என்னிடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்து,  உன் தங்கையின் மகளுக்கு,  மறுபடியும் நீங்கள் போட்டு அனுப்பியது போல்,  போட்டு அனுப்புங்கள்,  என்னை பற்றி உங்க தங்கையிடம் சொல்லாதீர்கள் என்று சொல்லி வைத்தார், நானும் அவர் சொன்னது போல் செய்தேன்,  அந்த பிடுங்கி வந்த நகையை வைத்து தான் நான் உனக்கு இவ்வளவும் செய்தேன் ; அவன் கேட்டது அடாவடிக்காக ஐம்பது பவுன் கேட்டான் என்பது, தெரிந்து கொண்டேன்,  சரி என்ன பண்ணலாம் என்று யோசித்து கோதாவில் இறங்கினேன்,  நான்நினைத்தது நினைத்தப்படி முடிந்தது, நான் என் சொந்த பணத்தில்  உனக்கு ஒரு தம்பிடி கூட செலவிடவில்லை, நீயும் எனக்கு ஒரு தம்பிடி கூட கொடுக்க வேண்டியது இல்லை போதுமா,.......

......... நம்மக்கிட்ட அவன் அடாவடி பண்ணினான் ஏன் பண்ணினான் , உன் மகள் வாயில் வயிற்றில் வாங்கிக்கொண்டதை காரணம் காட்டி அப்படி கேட்டு இருக்கிறான்,  நாம் கேட்பதை கொடுக்க வில்லை என்றால் எங்கே  அந்தராசியா விட்டுவிட்டு போய்விடுவானோ என்று பயந்து  நீ  செய்தாய்,  அதற்கு தான் இந்த தடால் அடியை நான் அடித்து காட்டினேன் அதனால் உங்க பிள்ளைகள் இடம் சொல்லி வை,  ஆனால் ஒன்னு நான் இப்படி செய்தது அவர்களுக்கு தெரியாமல் இருக்கட்டும் ; அதாவது மாப்பிள்ளையின் வீட்டாருக்கு என்று சொல்லி வை □□ என்றார் அண்ணன்

சரி  அண்ணா என்று காலில் விழுந்து கும்பிட்டு நன்றி சொன்னாள்

□□ பேராசை பெரும் நஷ்டம் என்பது சரியாகத் தான் இருக்கிறது; அப்படிப் பட்டவர்களுக்கு,  இப்படி செய்தது தான் சரி என்று படுகிறது , முள்ளை முள்ளாளத்தான்  களைந்து எடுக்க வேண்டும்,  வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் அதைத்தான் நான் செய்தேன்,  இப்போது அவனது பேராசை அவன் காலுக்கு செருப்பாகிவிட்டது,  அதுவும் பிஞ்சி போன செருப்பு ஆகி இருக்கிறது □□


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (26-Jul-21, 5:12 am)
Tanglish : pon nakai pun nakai
பார்வை : 85

மேலே