உப்புநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

உப்புநீ ராலுலவை உள்ளிலோ டிக்குத்தும்
எ’ய்’ப்பசன மாம்பித்தம் ஏறிடுங்காண் - செப்புகின்ற
வாயிலூ றுஞ்சலமும் மாதுவர்ப்பாம் மாதரசே
ஓயுங் குடல்வாதம் ஓது

- பதார்த்த குண சிந்தாமணி

வாயுவானது உடலில் அங்கங்கு ஓடிக் குத்துதல், உணவைக் குறைவாக உண்ணுதல் ஏற்படும்; பித்தம் அதிகரிக்கும்; உமிழ்நீர் துவர்ப்பாகும்; குடல் வாதத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-21, 7:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே