காதல் திருமகன்

என்னை காதலிக்க பிறந்தவனே

கைகளை கோர்த்தவனே

காதல் வலையில் என்னை

விழவைத்தவனே

கனவில் வந்து தூக்கத்தை

கலைத்தவனே

இதயத்தை கொள்ளை அடித்தவனே

பார்க்கும் இடம் எல்லாம் உன்

முகம்தான் தெரிகிறது

பேசும் வார்த்தை எல்லாம் உன்

பெயரே சொல்கிறது

உன்னையே நினைக்கிறேன் நீ

வரும்வரை காத்திருக்கிறேன்

உன்னோடு வாழ ஆசைதான்

நீயும் நானும் என்ற வார்த்தை

நாம் என்ற வார்த்தையாக மாற

வேண்டும்

எழுதியவர் : தாரா (29-Jul-21, 1:21 am)
சேர்த்தது : Thara
பார்வை : 166

மேலே