ஈனிடும் கன்னலும் - கட்டளைக்கலிப்பா

எள்ளும் கொள்ளுடன் சோளமும் ஓங்கியே
தண்ணீர் வற்றிய பூமியில் நன்றென
பச்சை தன்மையில் என்றுமே வாடிடா
நிலையில் மென்மையாய் உய்ந்ததாய் வாழ்ந்திடும்
நெல்லும் வெல்லுமும் ஈனிடும் கன்னலும்
நீரால் சூழ்வதால் வாழ்தலில் உய்ந்திடும்
இதுபோல் வாழ்ந்திட மக்களும் எண்ணிடின்
துன்பம் இன்பமும் ஏற்குமோ உள்ளமும்
------ நன்னாடன்

இந்தப் பாவானது எட்டு அரை அடிகளைக் கொண்டிருக்கும். அந்த அடிகள் வரையறுத்த எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. நேரசையில் பாடல் தொடங்கினால் 11 எழுத்துக்களையும், நிரையசையில் பாடல் தொடங்கினால் 12 எழுத்துக்களையும் அடி வரையறையாகக் கொண்டிருக்கும். [மெய்யெழுத்து நீங்கிட எண்ணுதல்) அரையடியில் முதல் இரண்டு சீர்க்களுக்கு இடையே ஆசிரியத்தளையும், பிற் சீர்களுக்கு இடையே வெண்டளையும் வருதல் வேண்டும்

எழுதியவர் : நன்னாடன் (29-Jul-21, 9:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 25

மேலே