வீணையை மீட்டும் விரல்களைக் காண

வீணையே உன் நாதம் என்னை
ஈர்த்து இழுத்து வந்தது இங்கே
வீணையை மீட்டும் விரல்களைக் காண...
வீணையின் பொழிவில் விழியின் அசைவில்
மௌனப் புன்னகை அழகில்
அவள் என்னைப் பார்த்தாள்
வீணையே நீ இடம் மாறி இப்போது இரவும் பகலும்
என் இதயத்தில் இசை மீட்டுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-21, 4:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே