கரியவிழியால் கவிதை பாடினாள்

பிரித்தாள் மெல்ல செவ்விதழை
சிரித்தாள் புன்னகை தவழ்ந்திட
பிரித்த இதழ்மெல்ல மூடினாள்
கரியவிழி யால்கவிதை பாடினாள்

---------------------------------------------------------------------------------------------------------------------
யாப்புப் பாவினத்தில் இது வஞ்சி விருத்தம்

பிரித்தா ளவள்மெல்ல செவ்விதழ் தன்னை
சிரித்தனள் மெல்ல மலரினைப் போன்று
பிரித்த இதழ்மூடி பாடினாள் பாவை
கரியவிழி யால்கவி தை
----இப்பொழுது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-21, 7:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே