கண்ணை நீஅசைக்கும் பொழுதில்

கண்ணை மூடிக்கண் ணைத்திறப் பாளவள்
---- மென்மை பூவிதழ் புன்னகை மெல்லியள்
விண்ணை சுற்றிடும் வெண்ணிலா தேவதை
----பெண்மை பேரெழில் மண்தனின் மேனகை
கண்ணை நீஅசைக் கும்பொழு தில்நிலா
-----வானை தொட்டிடு வேனடி என்நிலா
தண்ணீ ரின்மலர்த் தாமரை போலவும்
----- எந்தன் நெஞ்சம தின்எழில் ராணியே !

-------------------------------------------------------------------------------------------
யாப்பு வழி இது கட்டளை கலிப்பா
நாலு சீர் கொண்ட அரை அடி பின் நான்கு சீர் கொண்ட
அரையடி ---எண்சீர் எட்டடிப்பா .
தேமா வில் சீர் துவங்கியிருப்பதால் மெய் நீக்கி
ஒவ்வொரு அரை அடியிலும் 11 எழுத்துக்களே இருக்கும்
மா முன் நேர் வரும் நேரொன்றிய ஆசிரியத் தளை
முதிலிரண்டு சீர்களுக்கிடையில் அமையவேண்டும்
கண்ணை நேர் நேர் தேமா மூடிக்கண் நேர் நேர் நேர்
பிறசீர்கள் வெண்டளையால் அமைந்திருக்கும்
ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும் என்ற விதியும்
உண்டு . இல்லாமலும் எழுதப்படுகிறது
கட்டளை கலிப்பா என்று பெயரிருந்தாலும் இது
கலிப்பாவின் இனமல்ல இது வேறு என்றும் சொல்கிறார்கள்

குறிப்பு யாப்பார்வலர்களுக்கு மட்டுமே

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-21, 11:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே