நமது பாரம்பரிய உணவு - இட்டிலி சாம்பார் மகாத்மியம்

நமது பாரம்பரிய உணவு - இட்டிலி சாம்பார் மகாத்மியம்.

இட்டிலியில் சிறந்த இட்டிலி, எது தெரியுமா?
"அந்தக் காலத்தில்" பாட்டிமார் சுட்டுத் தந்த பானை இட்டிலிதான்!

இட்டிலிக் கோலும் ' ' காடாத் துணியும் ஒரு பானையின் வாயில் பொருத்தப் பட்டு,

இட்டிலிதாசன், பெரிய பொன்னான் வார்த்தைகள் இவை :

"சும்மா அச்சுக் கருப்பட்டி மாதரெ கிண்ணுனு எங்கம்மத்தா சுட்டுப் போடும்ங் கம்மிணீ! தொவயலெ ஊத்தி மும்மூணு இட்டிலிகளெ வீசிட்டம்ணு வெய்யிங்,
எள மத்தியான வெரைக்கி வவுத்துலே ஒரு சத்தம்மு இரகாது!
அப்பரொ மத்தியானச் சோரு வேலெ கய்யுட்ட பொரகு தின்னுக்குலா!
இட்டிலீண்ணா அது இட்டிலி!"

கவுந்தப் பாடிக் கரும்புச் சர்க்கரைக்கும் அந்தக் கரைவழித் தேம்பாவிற்கும், பனங்கருப்பட்டித் தூளிற்கும் நிலக்கடலைத் துவையலிற்கும்,
இட்டிலிப் பொடி நல்லண்ணெய்க்கும்,
கள்ளிக்கோட்டைச் சீனிச் சர்க்கரைக்கும்,
நல்ல உரைப்புடன் கூடிய துவரம்பருப்பு வெங்காயச் சாம்பாருக்கும்,
சுட்ட தக்காளிக் குழம்பிற்கும், சுட்ட கத்தரிக் குழம்பிற்கும், புளித்தொக்கிற்கும், கொத்தமல்லி கறிவேப்பிலைச் சட்டினிக்கும், கருணைக் கிழங்குக் குழம்பிற்கும் ......
....... இந்தப் பானை இட்டிலிக்கும் சர்வ லட்சணப் பொருத்தம் போங்கள்!

பார்த்தீர்களா நமது இட்டிலி எதனுடனும் பொருந்திச் சுவைக்கும்!

இட்டிலிக் கூட்டணியில்,
மிளகாய்ப் பொடி நல்லெண்ணெய்க் கூட்டை வேண்டுமென்றுதான் சொல்லாமல் விட்டேன்!
**********************************************************************************************
இட்டிலியைப் பற்றி இரண்டு மூன்று இட்டிலிதாசர்களின் இணைய உரையாடல் :

ஏன் இன்று இட்டிலியைப் பற்றி இத்தனை பேர் பேசுகிறார்கள்?
தெரியவில்லை! யாராவது இட்டிலிக்க்கர அம்மா யூட்யூபில் இட்டிலி செய்யரதை வீடியோ பதிச்சிருப்பாங்க!

இதுதான் உங்க படமா? அடேங்கப்பா..பா.!!!!
இட்லி சாப்ட்டே இவ்ளோ வளர்ந்திட்டீங்க போல.!!
இதப் படிக்கப்படிக்க 3வேளை மட்டுமல்ல, 4,5 வேளை கூட இட்லிய ( செய்யிற பக்குவத்தில செஞ்சா மட்டும்) சாப்பிட்டுட்டே இருக்கலாம்ல...jQuery1710599703053714673_1627592263987?

மிக்க நன்றி! உங்கள் இட்டிலியை ஒரு நூறு பேருக்கு அனுப்பி உள்ளேன்! பாவம் பலபேருக்கு இன்றைய கனவு முழுவதும் இட்டிலியாகத்தான் இருக்கப் போகிறது!

நன்றி..நன்றி..நானும் நிறைய பேருக்கு அனுப்பியுள்ளேன்..!!
அநேகமாக, தமிழ்நாடே இன்றைக்கு இரவு இட்லிக் கனவோடுதான் உறங்கும் என்று எதிர்பார்க்கலாம்..!

கூகுள் குருஜியைக் கேட்டுப் பார்த்தேன், பானை இட்டிலி எங்காவது படமாகவாவது கிடைக்குமா என்று.
அவரால் அந்த இட்டிலியின் படத்தையோ, இட்டிலித் துணியின் படத்தையோ இட்டிலிக் கோல் (புள்ளடிக் கோல்) இன் படத்தையோ தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை!

போனால் போகிறது என்று வாயகலமான இட்டிலிப் பானையை மட்டும் காண்பித்தார்!

என்ன பொருத்தம் பாருங்கள்! சற்ரு முன்னர்தான் என் பக்கத்து வீட்டுப் பெண் சுகன்யா, இட்டிலிக்கு ஆட்டித் தோண்டிக் கொண்டிருந்தவள், இட்டிலியைப் பற்றி என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள்! அதே நேரத்தில் மேல் வீட்டு அம்மணியும் இட்டிலியைச் சுட்டுப் புளிச் சட்டினியுடன் எனக்கும் சுகன்யாவிற்குமாக என்று கீழே அனுப்பினாள்!

இப்ப நம்ம வீட்லயும் இட்லிதானுங்க..சுடச்சுட..சாப்பிடவரீங்களா..jQuery17109486858495579409_1627592481846?
**********************************************************************************************
இட்டிலியின் சிறப்புத் தன்மைகளும் பயன்பாடுகளும்.

* தினமும் 4 இட்டிலிகள் உட்கொண்டால் 300 முதல் 350 கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இட்டிலியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.
* இட்டிலி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான வெப்பம் மற்றும் வளர்ச்சிச் சக்தியைத் தருகிறது, தசைகளுக்குப் பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்குச் சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

* இட்டிலியோடு சாம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்டிலியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
* வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்டிலி சாப்பிடுவது நல்லது. இதனால் வயிற்றுப் புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புக்கள் சீராக இயங்கவும் இட்டிலி மிகவும் உதவுகிறது.

* இட்டிலி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்டிலி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, காய்கறிகள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்டிலியைக் கொடுக்கலாம்.
* இட்டிலியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்டிலி மாவில் உளுந்திற்குப் பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.

* நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்டிலியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.
* இட்டிலி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவாக இருக்கிறது.

* இட்டிலி மாவைப் பன்னிரண்டு மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள், முக்கியமாக விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் வகைகள் உருவாகின்றன.
* இட்டிலி மாவு பன்னிரண்டு மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படி விட்டும் பயன்படுத்தக்கூடாது.

* இட்டிலியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்டிலி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவகங்களில் அதிக அளவில் சமையல் சோடாவைச் சீர்த்துப் பயன்படுத்துகிறார்கள். அது இட்டிலியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது. இட்டிலி மென்மையாக இருக்க சமையல் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

* இட்டிலியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் பன்னிரண்டு மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்டிலியை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்,
உடல் ஆரோக்கியத்த்ற்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்டிலி இருக்கிறது.

தமிழருடைய ஒப்பற்ற எளிய உணவுக் கண்டுபிடிப்பான இட்டிலியை மனமார வாழ்த்துவோம்!
வாயாற் வயிராற மனமாற உண்ணலாம் வாருங்கள்!!

எழுதியவர் : செல்வப் ப்ரியா-சந்திர மௌல (30-Jul-21, 2:25 am)
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே