காதல் மயக்கும் மாலை

நேரிசை வெண்பா

மாலையன்று கூடி மயங்கி மகிழவும்
காலையுச்சி சென்றது வாட்டியும் -- மாலைநீயும்
இன்றுமண வாளர் பிரிய மகளிர்க்கொல்
வன்படையா னாய்செத் தழி


காதலர் அன்றிருக்க மாலையும் இனிமையாய் கழிந்தது. அக்காதலன் பிரிந்த
இந்த மாலை மகளிரைக் கொல்லும் படையாக இருப்பதால் அது ஒழிகவாம்


குறள். 1/ 15

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jul-21, 9:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 110

மேலே