அந்திமாலை வாடுது

நேரிசை வெண்பா

இன்பமாய்ப் பொங்கும் இனியமாலை யேவாழ்க
என்துன்பம் சூழ்ந்தததோ நின்னையும் -- என்னகுறை
நின்வளப்பம் காணாநிற் கின்றாய்யென் காதலர்போல்
உன்துணை நீங்கினதோ சொல்

அழகு மாலையே வாழ்க. நான் என்காதலர் பிரிந்தமையால் வாடுகிறேன்
நீயும் வாடியிருக்கிறாயே ஏனாம். என்காதலர் போல உனது துணையும்
வராததால் நீயும் வாடினையோ என்று மாலைப்போதை கேட்கிறாள்.

திருக்குறள். 2/15 காமத்துப்பால்
...........

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jul-21, 12:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே