குடும்ப தலைவன் பதவி

குடும்ப தலைவன் பதவி

குடும்பத்தின் மைய புள்ளி
புள்ளியை தொட்டு
பல கோலங்கள்

அப்பா வரட்டும்
அவர் சொல்லட்டும்
முடிவுகள் அவனிடம்
எதிர்பார்த்து

இறுமாந்து தன்னை
சுமை தாங்கியாய்
வரித்து வரித்து

பிறர் மெச்சும்
பெரிய கோலத்தின்
மைய புள்ளிதான்

வாழ் நாள்
கழித்தல்களாய்
கரைய
வருமானம் நின்று
போய்
நோய் பற்றி
பிறர் கை
எதிர்பார்த்து

மைய புள்ளி
துணை புள்ளியாகி

தூரப்புள்ளியாகி
இறுதியில

கூட்டி பெருக்கி
கோல பொடியாகி
குப்பைக்கு போனது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Jul-21, 1:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 42

மேலே