விவசாயின் மனவேதனை

விவசாயின் மனவேதனை.**

வெட்டிப் பேச்சு பேசியே காலத்தை சாகடிப்பர்,
எல்லாம் தெரிந்த மேதை என்பர்
சந்தைக்கு சென்று - நீ
அறவிலை சொல்கிறாய் என்பர்

விவசாயி அவர்களிடம்.
வாழைக் கன்று ஒன்று வாழை மரமாகி,
காய் வந்து கனியாகி
சந்தைக்கு எடுத்து வர
காத்திருக்கும் மாதங்கள் என்ன? என்று கேட்டால்!

ஒரு சிலர் தெரியாது என்பர்
மற்றும் சிலர் பல் இழித்து நிற்பர் - ஏன்
அதில் ஒருவர் மூன்று மாதம் என்பார்.

கேளுங்கள், படித்த மேதைகளே !
குளிர் அறை வாசிகளே !
ஆறு மாதமடா குறைந்தது
ஆறு மாதமடா என்பான்.

சண்டியூரான் அவர்களிடம்
ஆடும் கடிக்காமல்
மாடும் மேயாமல்,
கள்வர்களும் காவிச் செல்லாமல்
கண்விழித்து காவல் காத்து,
கால் வலிக்க சைக்கிள் விளக்கி
சந்தைக்கு எடுத்து வருவான் விவசாயி.

அவனும் மனிசனடா,
வீடு உண்டு வாசல் உண்டு
மனைவி உண்டு மக்கள் உண்டு,
பள்ளியிலே இரண்டு படிக்கும்
வீட்டில் ஒன்று வயதாகி காத்திருக்கும்,
சிந்தித்து பாருங்களடா நீசர்களே.

**குறிப்ப:. வெள்ளை இன மக்கள் வசிக்கும் நாடுகளை பாருங்கள். USA, Canada, EU Australia New Zealand அங்கு விவசாயிகள் தற்கொலை செய்வதில்லை. அங்கெல்லாம் வள்ளுவன் வாழ்கிறான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (30-Jul-21, 3:51 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 50

மேலே