கண்ணால் நீகணை தொடுத்தால் செத்தேன்

மெல்ல நீசிரித்தால் முல்லை மலரும்
----கண்ணை நீஅசைத்தால் காதலைப் பேசும்
சொல்லை நீஉதிர்ப்பாய் தேன்தமிழ் கொஞ்சும்
-----பெண்ணே உன்மனசு மாசிலாத் தங்கம்
வில்போல் உன்புருவம் வானவில் என்பேன்
------கண்ணால் நீகணை யைத்தொடுத்தால் செத்தேன்
எல்லை இல்லாத பேரழகு தன்னில்
------விண்ணில் மண்ணில் ஒருத்திநீ தானடி !

------------------------------------------------------------------------------------------------------------
இது கட்டளைக் கலிப்பா

யாப்பு வழி ரசிப்போர்க்கு குறிப்புகள்

முன் அரையடி பின் அரையடி இரண்டிலும் தேமாச்சீர்
மா முன் நேர் வரும் நேரொன்றிய ஆசிரியத்தளை.
எழுத்துக்கள் 11 11 இரு அரையாடியிலும்
பிற சீர்கள் வெண்டளையால் ஆனவை

மெல் சொல் வில் எல் ---முதல் அரையடிகளில் பொலிந்து வரும்
எதுகை அழகுகள்
கண் பெண் கண் விண் --இரண்டாம் அரையடிகளில் பொலிந்து வரும் எதுகை அழகுகள்.
இரண்டிலும் எதுகை அமைந்திருப்பது இப்பாவின் சிறப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-21, 7:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே