கேளி யிளநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கேளியுண்ண மேகம்போங் கேளாய் மடமயிலே
நீளகட்டுக் கீட நிலையாதே - தாளாத
தாகமொடு மந்தமறுந் தானே கரப்பனும்போம்
வேகவன லுந்தணியு மே

- பதார்த்த குண சிந்தாமணி

கேளியிளநீர் இரத்த மேகம், மலக்கிருமி, அதிதாகம், மந்தம், கரப்பான், மிகுசுரம் போன்றவற்றை நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jul-21, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே