மஞ்சள் - கச்சி இளநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பித்தம்போஞ் சோபையறும் பேருலகி (லி)யாவர்க்குந்
தொத்து கபமுந் தொலையுங்காண் - தத்துகின்ற
பொல்லாப் பழஞ்சுரமும் போகுமஞ்சட் கச்சிக்குப்
பொல்லாப்பொன் றில்லை புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

மஞ்சள்கச்சி இளநீர் பித்த தோடம், சோகை, சிலேட்டுமம், பழையசுரம் ஆகியவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jul-21, 10:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே