கன்னத்தில் தந்தேன் ஓர்முத்தம்

தென்னங் கீற்றினில் தென்றலாடும் போதில்
-----சின்ன மெல்லிடையும் மெல்ல அசைய
தென்னை யும்நீசா யும்பொழுதில் ஆட
-----மின்னல் கண்ணிரண்டில் விண்மீன்கள் துள்ள
மென்பூந் தேனிதழ்கள் தன்னில் தவழ்ந்து
------ சின்னப் புன்னகையோ வெண்தேன்போல் சிந்த
அன்பில் உன்னிடம்நான் ஓடியே வந்தேன்
------கன்னத் தில்தந்தேன் ஓர்முத்தம் நாணமோ ?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது கட்டளைக் கலிப்பா

யாப்பு வழி ரசிப்போர்க்கு குறிப்புகள்

முன் அரையடி பின் அரையடி இரண்டிலும் தேமாச்சீர்
மா முன் நேர் வரும் நேரொன்றிய ஆசிரியத்தளை.
எழுத்துக்கள் 11 11 இரு அரையாடியிலும்
பிற சீர்கள் வெண்டளையால் ஆனவை
எதுகைகள் அமைந்திருப்பது பாவிற்கு ஓசை இனிமை

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-21, 11:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே