அடுக்கு இளநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அடுக்கிளநீர் ஐயத்தை யண்டா தகற்றும்
வடுக்கண்ணா யின்னும் வகுப்போம் – படுக்கும்போ(து)
உண்டாற் சுகமெய்தும் உள்ளாங் கிருமியிதைக்
கண்டால் இறந்துவிடுங் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

தூங்கப்போகும் முன் அடுக்கிளநீரை உண்டால் தூக்கம் வரும்; கபதோடம், மலக்கிருமி இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jul-21, 11:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே