உண்பதற்கு முன்பு - பின்பு -நடு - இக்காலங்களில் அருந்தும் வெந்நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஊணுக்கு முன்புவெந்நீர் உண்டாக்காற் றீபனம்போம்
ஊணுக்குப் பின்பருந்தில் ஊதியமாம் - ஊணுக்குப்
பாதியிலுண் டாற்பசியும் பாதியா மிப்புனலே
யோதுசுரம் வாதமகற் றும்

- பதார்த்த குண சிந்தாமணி

உண்ணும் முன் வெந்நீர் குடித்தால் பசி மந்தப்படும்; உண்ட பின் பருகினால் நன்மை பயக்கும்;. சாப்பிடும் போது நடுவில் அருந்தினால் பசி மத்திமமாகும்; வெந்நீர் வாதசுரத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-21, 5:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே