சேல்மால் சேலையை நூல்போல் இடையில் அணிந்து

சேல்மால் கடையில் சீப்பாய் வாங்கிய சேலையை
நூல்போல் இடையில் அணிந்து சேல்போல் விழியசைய
கால்பதித்து தெருவழியே நீநடக்க பலபெண்கள் பார்க்க
சேல்மால் சேலையெல் லாம்நொடியில் விற்றுத் தீர்ந்ததடி !

பொருள் விளக்கம் :

சேல் மால் =SALE MALL

சேல்போல் = சேல் மீன் போல் விழிகள்
மீன்களில் கெண்டை சேல் அயிரை என்று உண்டு

சேலாலே விழிகள் இங்கு ஆலோலம் பாட ...என்று ஒரு இனிமையான திரைப்பாடல் உண்டு

சேலை ---புடவை-- பருத்தி பட்டு சிந்தடிக் ஃபைஃ பரில்
உருவாக்கப்படும் பெண்களின் ஆடை
சாரி ஷோ ரூமில் மானேகுயின் mannequin பொம்மைகளுக்கு
கட்டி வைத்திருப்பார்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்

---யாப்பில் இது கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-21, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே