வதை

வதை வதைதான்,
வாழத் தெரியாதவன்,
படுவான் வதை.

வாழ்கிகையில் விழுந்தவன் படுவான் வதை;
விடியல் இல்லா வாழ்வில் வரும் வதை;
விழிகள் தேடுவது வதை;
விழுந்து புரண்டு அழுவதும்,
மாண்டவன் திரும்ப வராததும் வதை;
இருந்தும் உண்ணமுடியாது தவிப்பது வதை;
இருப்பதை வைத்து வாழத்தெரியாதது வதை;
விருப்பம் இல்லாத வாழ்க்கையே வதை;
விரும்பியவர்கள் செய்வதும் வதை;
விருந்தோம்பலை மீறுவது,
விருந்தாலிக்கு வதை;
விடியும் விடியும் என்று,
வீட்டில் வீற்றிருப்பவன் படுவதும் வதை;
விஷயம் இல்லாது லொட லொட என்று பேசுபவனிடன்
படுவோம் வதை;
விஷத்தை நெஞ்சில் வைத்திருப்பவன்;
செய்வான் வதை;
விஷமக்காரன் செயலே வதை;
இருப்பவன் இல்லாதவனிடம் செய்வான் வதை;
இதய பாரமே வதை;

வதை வதை வதை;
அதுவே சித்திரவதை;
வதை வதை,
வாட்டும் வதை.

வறுமையும்வதைதான்,
வாலிப வதை;
வாயில்வா ஜீவன் படும் வதை,
பசுவதை,
பசிவதை,
சிசு வதை,
பாவி செய்வான்,
பாலியல் வதை;
பெண்வதை,
காத்திருக்க வைத்து,
காதல் தருவது,
காதல்வதை.
தோற்றவன் துவழ்வது,
தோல்விவதை,
உறவாடிக்கெடுப்பது,
உயிர்வதை,
உறவால் வதை;
உவாதையால் வதை;
உன்னால் வதை;
என்னால் வதை;
பிரிவின்வதை;
பரிவின் வதை;
மௌனத்தின்வதை;
முடக்கிய முதுமையின் வதை;
முரட்டுக்குழந்தையால் வதை;
முட்டாலால் வதை;

கால்கள் நடக்க மறுக்கின்றன,
நோவின் வதை;
கண்கள் கண்ணீர் வடிக்கின்றன
ஏக்கத்தின் வதை;

கண்கள் உறங்க மறுக்கின்றன,
காதலின் வதை;

தேவதை முன் நின்றும் திரும்பாமல் போனால்
வதை;
தெரியாதவனிடம் பேச தயங்கும் பெண் படுவது,
பெண்மையின் வதை;
விதை விதை நற்பன்புகளை விதை;
இல்லையேல் வதை வதை வதை;
வதையை விதைக்காதே;
பதை பதைக்காது இருக்க;
வாழ்வை சிதைக்காது இருக்க;
வதையை விதைக்காதே.
வாழ்வில் துயருறுவதை விடுத்து
நலம்பெற வதையை உதை

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (4-Aug-21, 9:28 am)
பார்வை : 59

மேலே