காமம் கொண்ட

காமம் கொண்ட புணர்வினால்
தேகம் கொண்டு பிறந்துவிட்டோம்
ஆசை அதிகம் கொண்டதனால்
ஓராண்டாய் குழந்தை உருவில்

பல்முளைக்க ஆண்டு ஒன்று
சொல்வரவும் எண்ணிக்கை உண்டு
உண்ணவும் உடுத்தவுமே
நம்மைச் சார்ந்தவர் யாரேனும் வேணும்.

பிறரின் உழைப்பைக் கொண்டு வாழ்ந்திடவே
ஒரு போதும் வெட்கியதில்லை
பொய்யையும் திருட்டை மட்டும்
வெள்ளாமை செய்யத் துணிவோம்

கள்ளமாய் பேசி பேசியே
பள்ளத்தில் பலரை தள்ளுவோம்
நல்லதை சொல்லுவோரை
நடுவீதியில் கொலை செய்யுவோம்

மனிதப் பிறவி என்பதொரு
மாசுக் கொண்ட துர்பிறப்பு
காசுக்காக எதையும் செய்யும்
கழிதுவாரத்தின் அழகு உறுப்பு.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Aug-21, 8:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : kamam konda
பார்வை : 98

மேலே