ஆசிரமக் கல்வி

நேரிசை வெண்பாக்கள்

ஆசிரமம் நான்காக வன்று பிரித்துவைத்தார்
ஆசிரமம் மன்னரின் மானியமே -- வாசி
குருகுலம் காத்தார் குவலய மன்னர்
பெருமை யதிழிவா மின்று

பிரமச்சாரி ஆசிரமம்

இல்லறஞ்செய் இல்லாளும் இல்லா நடத்தினன்
நல்லபிர மச்சாரி ஆசிரமம் -- கல்வியை
எல்லாரும் சீடரா மென்றே சிறப்பாக
நல்லறங் கற்பித் தனன்

கிரகஸ்தன் ஆசிரமம்

இல்லாளு டன்சேர்ந்து இல்லறம் பார்த்தவன்
கல்வி கிரகஸ்தன் ஆசிரமம் -- எல்லாமும்
பொல்லாது இல்லா குருகுல வாசம்
நல்லறங் கற்பித் தனன்

வானப்பிரஸ்தன் ஆசிரமம்

நாட்டின் மனிததொல்லை யற்றதாய் வாழ்ந்திட
காட்டிலில் லாளுடன் அற்றதுமாய் -- காட்டினில்
நல்குருகு லத்தைத் தொடர்ந்தனர் சீடர்க்கு
நல்லறமும் கற்பித் தனன்


முற்றும் துறந்த துறவி (சன்யாசி) ஆசிரமம்.

முற்றும் துறந்த முனிவர் களன்றெலாம்
கற்ற பரசுராம ரைப்போன்றே -- நற்றவ
கல்வியுடன் வித்தை பலதில் பயிற்சியுடன்
நல்லறமும் கற்பித் தனன்

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-21, 5:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே