நீல விழிகள் மெல்ல விரிய

நீல விழிகள் மெல்ல விரிய
மலர்விழி
உன் இரு விழிகளும்
மூடித் திறக்கும்
முடிவில்லா தொடர் நாவல் !

உன் செவ்விதழ்கள் இரண்டும்
செந்தமிழ்க் கவிதைப் புத்தகம்
திறந்தால்
முத்துக்களில் துவங்கும் ஆரம்பம்
முடிவில்லா மோக ராகங்கள் பாடும் !

கலைந்தாடும் கூந்தல்
கார்முகில் வண்ணம்
உன் விழிமின்னல் அங்கே தோன்றும்
உன் செவ்விதழ்கள் மெல்லத் திறக்க
நீல விழிகள் மெல்ல விரிய
அங்கே ஒரு வானவில் தோன்றி மறையும் !

இயற்கையை உன் எழிலில் ஏந்தி நடக்கும் நீ
மாலையின் ஓர் அங்க நாடகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-21, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே