சொர்க்கம்

அந்தி சாயும் வேளை
சிலுசிலு வென்ற காற்று
கைக்கெட்டும் தூரத்தில் மலைமுகட்டில்
நிலா பெண்னை வரவேற்க
கதிரோன் விரித்துள்ள
செந்சிவப்புக் கம்பளம்...
மழலைகளின் சத்தம்
கூட்டிற்கு திரும்பும்
பறவைகளின் கீச் கீச்....

மனதிற்கு இனிய இதிகாசம்
ஒரு கையில்....
தேயிலை வாசத்துடன்
தேனீர் ஒரு கையில்
இதிகாசத்திற்கு இணையான
ஏகாந்தம்.....
சொர்க்கம் செல்ல
இறப்புக்காக காத்திருக்கும்
அவசியம் ஏனோ????

எழுதியவர் : கவி பாரதீ (5-Aug-21, 2:14 pm)
சேர்த்தது : கவி பாரதீ
Tanglish : sorkkam
பார்வை : 179

மேலே