விருப்பம் இல்லாத கால்கள் விறுவிறு என்று நடக்க கண்டேன்

காலை இளம் வேலையில்
கவலைதோய்ந்த முகத்துடன் கடிந்தே கால்கடுக்கச் சென்றேன்
காட்சிகள் பல கண்டேன்

கலங்கிய மனதுடன்
கண்டகோலங்கள் கவலையைக் கூட்ட
கலையிழந்த நகரில்
கண்டபடி நடந்தேன்

கண்ணில் கண்ட காட்சிகளில் காலப்பரிமானத்தின்
மாற்றத்தைக் கண்டேன்
நாகரீக சீர்கேட்டினை கண்டேன்

நரைபடிந்த இளைஞர்கள் முடியைக் கண்டேன்
கரைபடிந்த இதயத்தைக் கண்டேன்

நகரைத்தாண்டி போகவே கால்கள் நடுங்கக் கண்டேன்
நகர் நரகமாய் மாறிக்கிடக்கக் கண்டேன்
மனதைக் கீறி
மறுபடியும் கவிதை எழுதத் துடித்தேன்

சுயநலவாதிகள் சுற்றித் திரிவதை கண்டேன்
சுறு சுறுப்பான ஓட்டத்தில்
சுருண்டு கிடக்கும் மனித நேயத்தைக்கண்டேன்

சுட்டுப்பொசுக்கிய கருணை உள்ளங்களைக்கண்டேன்.

இறக்கமே இல்லாத இருதய சாமிகள் பலரைக் கண்டேன்;

விறு விறுப்பான வாழ்க்கையில்
விழுந்து தவிக்கும் மனித கூட்டத்தைக் கண்டேன்.

வேற்று உலகில் இருந்து வந்த விலங்குகள் தானோ என்றே பயந்து நடந்து சென்றேன்


காலை இளம் பொழுதில்
கதிரவன் வந்த வேலையில் கண்ணை மூடி உறங்கும் இளைஞர் கூட்டத்தைக் கண்டேன்

கண்ட கண்ட கனவைக் கண்டு
கையில் இருந்த கைபேசில் பேசியே காலத்தைப் போக்கிய
இளமையைத்தொலைத்த இன்றைய இளைஞர்களை கண்டேன்

கலாச்சாரம் களவுபோகக்கண்டேன்
பழக்கவழக்கங்கள் பழுதடைந்து பாழாய் கிடக்கக் கண்டேன்

ஆன்மீகம் அழிந்து போய் ஆட்டு மந்தைகள் போன்ற மக்கள் ஓடக் கண்டேன்

அதிகாலை உதயத்தைதையும்
அறியாது உறங்கிய இளைஞனின் வாழ்க்கையும் கண்டேன்
இடிந்தே போனேன்.

நகரைத்தாண்டி கிராமமும் ;சீர்கெட்டு கிடப்பதைக் கண்டேன்

வயக்காட்டு வரப்பில் வயதான தகப்பன் உழுது கொண்டிருக்க
உருஞ்சியே தேனீரைப் பருகி தெரு ஓரத்தல் வெட்டிக்கதை பேசிய வீனர்களையும்

பொழுது விடிந்தும் போதை ஏத்த
தெருஓர சாராயக்கடையில் வரிசையாக நின்ற வாடிக்கைக் குடிகாரனைக் கண்டேன்.

குடித்து குடித்து நிதானம் கெட்டு
தரையில் விழுந்து கிடந்த இளைஞர்களைக் கண்டேன்

மது மாது சூது என்ற மாய வாழ்க்கையில் விழுந்து மயங்கிக்கிடக்கும் கூட்டத்தைப் பார்த்தேன்

விடிந்தும் வேலையின்றி தவிந்த
வேலையில்லாப் பட்டதாரிகளைக் கண்டேன்
வானம் என்னும் விசும்பு கண்ணீர்விடக்கண்டேன்

விடியலும் ஏன்வந்தது என்றே என்னி
விதியை நொந்துக்கிடந்த
ஏழைக் குடும்பத்தைக் கண்டேன்.
தெரு ஓர வாழ்க்கையைக் கண்டேன்
தெரு நாய்கள் போன்று மக்கள் வாழ்க்கை நடத்துவதையும் கண்டேன்

ஊர்கோடியில் உருவாகி இருக்கும்
சாக்கடைச் சாம்ராஜியத்தைக் கண்டேன்

காணும் இடமெல்லாம் அமலியைக்கண்டேன்

தேடலின் வேட்கையைக் கண்டேன்
தேங்கிக்கிடக்கும் தவிப்பைக் கண்டேன்
தேய்ந்து போனமனதைக் கண்டேன்
தினம் தோறும் தெருவில் வந்து திண்ணும் கூட்டத்தைக் கண்டேன்.

தண்ணீர் தண்ணீர் என்று தத்தளிக்கும் கூட்டத்தைக்கண்டேன்

கண்ணீர் விட்ட மேகத்தின் சோகத்தைக் கண்டேன்.

மேவிய கதிர்கள் மெல்ல சோபிக்கக் கண்டேன்.

சுறுசுறுப்பாக எறும்புகளும் பறவைகளும் இயற்கையும் இருக்க
சோம்பேரியாகக் கிடந்த மனித வர்க்கத்தைக் கண்டேன்

தெருவில் வழிந்து
துர்நாற்றம் வீசும் சாக்கடையைக்கண்டேன்

தெருவெங்கும் குடிதண்ணீருக்கு போடும் தெருச்சண்டையைக் கண்டேன்

உல்லாசமாய் வாழத்தவிக்கும் கூட்டத்தைக் கண்டேன்

ஊர்சொத்தை சூறையாடத் துடிக்கும் கூட்டத்தைக் கண்டேன்
மொட்டையடிக்கப்பட்ட மரங்களைக்கண்டேன்.

தோட்டக்கலை என்ற பெயரில் தொட்டியில் செடிகள்; படுத்துறங்குவதைக் கண்டேன்

வெட்டிப்பே;சி பேசும் வீனர்களைக் கண்டேன்

ஜோடிப் புறாக்கள் உட்கார்ந்து சொந்தம் கொண்டாடிய மரங்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன்
கானகமே தீஞ்சிப்போய் கிடக்கக் கண்டேன்.

புதிய ஜோடிப்புறாக்கள் ஜாடைகாட்டிக்கொண்டே
சல்லாபமாய் ஊர் சுற்றிவருவதைக் கண்டேன்
மால்களிலும் தியேட்டர்களிலும் மசாஜ் சென்றலிலும் கூட்டத்தைப் பார்த்தேன்விவசாயநிலம் வெடித்து பிளந்து கிடக்கக் கண்டேன்

காடுகள் அழிந்து நாடாகப்பட்டதைக் கண்டேன்

கழனியெல்லாம் காலணியாக மாறிக்; கிடக்கக்கண்டேன்


திங்களும் திக்கு முக்கு ஆடி வின் வெளியில் விளக்கேற்றக் கண்டேன்

வாகனங்கள் தொழிற்சாலைகள் விடும்புகை காற்று மண்டலத்தை கருமையாக்கி
நச்சை கலக்கக்கண்டேன்

கண்ணீர் சிந்திய
கருமேகங்கள் கூடி கூடி ஒடக்கண்டேன்

கரைந்த குழந்தைபோல்
;முழங்கி
முக்காடு போட்ட மேகங்கள்
முழு சோகத்தில்
ஏங்கி ஏங்கி கண்ணீர் விடக்கண்டேன்.

மழைத்துழிகள் விஷத்துளிகளாய் விழக்கண்டேன்

சிறிது நேரத்திற்குள்
சீற்றம் கொண்டு
குவிந்த மேகங்கள் கழண்டு ஓடக் கண்டேன்

பூமி வெப்பம் ஆகக்கண்டேன்
வேற்று உலகுக்குத்தான் வந்துவிட்டோமோ என்று
வேதனை அடைந்தேன்

ஆற்றங்கரை ஓரத்தில் நின்ற மரங்கள் அடையாளம் இல்லாமல் மறையக்கண்டேன்
ஆற்றுமணல் கொல்லை போனதைக் கண்டேன்.
ஆறு போன தடையம் காணாது துடித்து நின்றேன்

குளம் குட்டை வாய்க்கால் வரப்புகள்
மாயமாய் மறையக் கண்டேன்

இவைகள் எல்லாம் வீடுகளாய் கட்டிடங்களாய்; மாறி நிற்கக் கண்டேன்


விரிவாக்கம் என்றபெயரில்
நடந்த விபரீத்தைக் கண்டேன்
விஷமக் காரர்களின் வக்ர புதியைக்கண்டேன்

வெறுப்போடு வீடு திரும்புகையில்

விலைமாதர்களின் வலையில் விழுந்த இளைஞர்களைக் கண்டேன்

கொழுத்தும் வெயிலில்
கொப்பளிக்கும் வேர்வையைக் கண்டேன்

குடித்தே வந்து வீட்டை சூறையாடிய சோனங்கி புருஷனைக் கண்டேன்

கெட்ட சகவாசம் வைத்தே
மனம் கெட்டுப்போன
மானம் இல்லா மனிதக் கூட்டத்தைக் கண்டேன்
;
ஊனமாகிய வாழ்க்கையைக் கண்டேன்
உழுத நிலங்கள் விலைபேசப் படுவதைக் ;கண்டேன்

பச்சை சோலைகள் எல்லாம் பட்டுப் போகக் கண்டேன்
பட்ட மரங்கள் விட்டு விட்டு நிற்கக் கண்டேன்

விளைந்த நிலங்கள் தரிசாகக் கிடக்கக் கண்டேன்

பச்சைஆடையாம் பயிர்கள் நின்ற நிலங்கள்
பிளந்து கிடக்கக் கண்டேன்

நிழல் தந்த மரங்கள் நில்லாமல் போகக் கண்டேன்

ஓட்டை சாலையில்
ஓராயிரம் மேடு பள்ளங்களைக் கண்டேன்

இருசைக்கிள் வாகனத்தில்
இரவும் பகலும் மைனர்கள் சுற்றிவரக் கண்டேன்

;விற்றே பட்டா போட்ட
வெரு நிலங்களைக் கண்டேன்

வின் எட்டும் உயரத்தில்
மாளிகை வீடுகள் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்தேன்

மரத்தில் இருந்த பறவைகள் கூட்டம் எல்லாம் மறைந்து போன அவல நிலையைக் கண்டேன்

தடாகங்கள் குளங்கள் எல்லாம் குப்பைகள் கொட்டி நிரப்பக் கண்டேன்

தெரு ஓரங்களில் சராயக்கடையும்
வேலையில்லா இளைஞர்களின் வீன்பேச்சையும் கேட்டேன்

வேர்தே விரு விருத்து வரும்போது
வேண்டும் என்றே
சீண்டி சினம் கொள்ள வைத்த சிறுபுத்திக்காரனின்
சிற்றின்ப நாடகத்தைக்கண்டேன்

மங்கையர்கள் மகிழ்ந்து குளித்து விளையாடிய நீர்த்தாடாகங்கள்
நில்லாமல் மறையக்கண்டேன்

குயிலின் குரல்கள் மறைந்து
குடிகாரர்களின் கும்மாளத்தைக் கண்டேன்

கானகம் இல்லா பாலையைக்கண்டேன்
பள்ளிச் சிரார்களும்
பல்ப்பம் எடுக்காது
புகைக் குச்சி ஊதக்கண்டேன்

மலர்பூத்த கானகம் மக்கக் கண்டேன்
மனம் உடைந்து திரும்புகையில்
தமிழை மறைந்து
தல தலத்த பாசையில்
தன்னையும் அறியாது
மெய்மறந்து கைபேசியில் பேசிக்கொண்டே நடந்து சென்ற இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டேன்


குனிந்த தலை நிமிர்ந்து
ஸ்கூட்டரில் பறந்து செல்லும்
இளவட்டு மங்கையர்களைக் கண்டேன்

பேருந்தில்பிழிந்து எடுக்கும்கூட்டத்தைப் பார்த்தேன்
முகசாந்தை பூசி
முகமூடிபோன்று
முழு அழகை அழித்து
முன் வந்த நாகரீக நங்கையைக் கண்டேன்

நடமாடும் அவள் கால்களில் கை கீல்ஸ் கெஞ்சக் கண்டேன்

தாவனி சேலை தாண்டி
நவநாகரீக ஆடையின்
வேடத்தைக் கண்டேன்

வேவு பார்க்கும் உடையில்
உல்லாச ஓட்டைகள் பல
உடம்பு தெரிய
வேதனை அடைந்தேன்

வேற்று உலகுக்குள் புகுந்தோமோ என்ற வேதனை அடைந்தேன்

தன்னம்பிக்கை இல்லாத
தமிழை விரும்பாத இளைஞர்களைக் கண்டேன்

விவசாயத்தை விற்றே ஒழித்த கூட்டத்தைக் கண்டேன்.

;விதியத்து வெந்து நொந்து கிடந்த விவசாயக் கூட்டத்தையும் கண்டேன்
கஞ்சிக்கு செத்த
கிராமங்களையும் கண்டேன்

வஞ்சித்த உலகின்
வக்கிர தாண்டவத்தைக் கண்டேன்

நாடோடிகளாக கிராமத்தைவிட்டு
மக்கள் வாழ்வாதாரம்
தேடி
கூட்டம் கூட்டமாய்
நகர்ப்புறம் இடம் பெயரக்கண்டேன்

நாகரீகத் தாக்கத்தின்
நடுக்கத்தை
மக்களின் வாழ்க்கை வழிமுறையில் கண்டேன்.

வாய்க்கால் ஓடையில் எல்லாம் கையாளப்பட்டு கட்டிடங்கள் நிற்கக் கண்டேன்

கொளுத்தும் வெயிலின்
கொடூரக் கனலைக் கண்டேன்

நீர் ஆதாரங்கள் எல்லாம் நிற்ழூலகாக போகக் கண்டேன் கண்டேன்
நிலத்தடி நீர்கள் எல்லாம்
உறிஞ்சப்பட்ட நிலையைக் கண்டேன்

குப்பைகள் நிறைந்த தெருக்களைக் கண்டேன்

உறவுகள் எல்லாம் ஓடக்கண்டேன்

மனபலம்போய்
பணபலத்தைத்தேடும் கூட்டத்தைக் கண்டேன்

தாக்குப்பிடிக்காது
தூக்குபோட்டு இறக்கத்துடிக்கும்
மனிதனைக்கண்டேன்

தாகத்தைத் தவிக்க தண்ணீரைத்தேடி
கடைகளுக்கு
குப்பிக் குடிணீரை காசுகொடுத்து வாங்கும் கூட்டத்தைப் பார்த்தேன்

ராஜியங்களின் ரகசிய ஆட்டத்தைக் கண்டேன்
ரக ரகமாய் பறக்கும் கொடிகளைக் கண்டேன்
வண்ணக் கொடிகிளின் முறையீட்டைக்கேட்டேன்

முழங்கித் திரியும் கட்சி கூட்டத்தைப் பார்த்தேன்

முடிவுதெரியாத தேடலில்
தவிக்கும் கூட்டத்தைப்பார்த்தேன்

காசுக்காக கட்சிகள் மாறும் கூட்டத்தைப் பார்த்தேன்

கல்லர்; கலராய் சாயம் பூசி
விதவித மாய் கட்டிங் அடித்து
வீதியில் திரியும் மைனர் கூட்டத்தை பார்த்தேன்.

கட்டைபந்து விளையாடும்
மைனர்காரரின் தலைமுடி கோலத்தைக் கண்டேன்

வீதியில் நாதியத்து கிடந்த
முதியவர்களின் முனு முனப்பைக் கேட்டேன்

விலைபோன மனிதாபிமானத்தைக் கண்டேன்
விற்றே திண்ண நினைத்தக் கூட்டத்தைக் கண்டேன்
விழுந்து கிடந்த
அகோர அழகைக்கண்டேன்

விருப்பம் இல்லாத மனதுடன்
வீடு திரும்புகையில்
வீதியில் நடக்கவே விருப்பம் இல்லாத என்; கால்கள் விறுவிறு என்று நடக்கக் கண்டேன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (5-Aug-21, 4:06 pm)
பார்வை : 42

மேலே