நான்

உன் முற்றுப் பெறாத
இதழ் வரிக் கவிதையில்
சிக்கித் தவிக்கும் சிறு
சிந்தனையாளனாக நான்....

உன் கன்னக்குழியில்
தடுக்கி விழுந்த
நடை பயிலும்
சிறு பாலகனாக நான்....

உன் விழிக்கடலில்
முத்தெடுக்கும் ஆசையில்
நீச்சல் பயிலும்
சிந்தை தொலைத்த நான்.....

உன் பார்வை வேல்
துளைத்து இதயம்
குருதிக் குழம்பாக
வலியின் உச்சத்தில் நான்....

உன் இதழ் சொர்க்கம்
விரியும் சிறு பொழுதில்
மின்னும் வெண் ஜாதி
முத்துக்களை
தீண்டும் ஆசை
தீயாய் தகிக்க
திசையறியாது நான்.....

உன் ஆயிரம் தடைச்
சொற்களும் என்
சிந்தைக்கு எட்டாது
மந்தி மனம் படைத்த
வேங்கையாக வெற்றுத்
தரையில் இன்று நான்....

உன் பார்வையில் மட்டும்
என்றென்றும் தவற்றுக்கு
முழு முதற்காரணமாக
முற்றுப் பெறாத கேள்விக்
குறியாக நான்....

எழுதியவர் : கவி பாரதீ (5-Aug-21, 11:09 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : naan
பார்வை : 178

மேலே