சமையல் - கேயாஸ் தியரி - நான் எப்ப சமைக்க கத்துக்கிட்டேன்

என்னாங்க...

அம்மா சமையல் , பாட்டி கை பக்குவம் , மறந்து விட்ட உணவுகள் இந்த பட்டியல் தானே ??

இல்லை !!!

நீங்கள் "கேயாஸ் தியரி" கேள்விப்பட்டது உண்டா??

எந்த ஒரு சிறு நிகழ்வும் நம் வாழ்வில் நடக்கவிருக்கும் ஓர் பெரிய அதியாயதின் தொடக்கமே !!
அனைத்து நிகழ்வுகளுமே ஒன்றினைகபட்டவை!!

இனி கதைக்குள் செல்வோம்..

ஒரு வீட்டில் உயிரோட்டம் மிகுந்த பகுதி என்றால் அது " குசினி" எனப்பட்ட "சமையலறை"யே ஆகும்!

பிள்ளைபிராயதில் பசியாற மட்டுமே எட்டிப்பார்த்த சமையலறை, பின்னாளில் நானும் என் அன்னையும் நடத்தும் ஆள்மன உரையாடகளுக்கான இரகசிய இடமானது!

அத்தகைய நாட்களில் என் தந்தையின் வாயில் இருந்து..

"ஆம்பள பையனுக்கு அடுபங்கரையில் என்ன வேலை??

"இப்படி ஆத்தாவும் மகனும் சமயகட்டுலயே இரகசியம் பேசிக்கிடங்க!!

"என்ன இவன் பட்லர் போல சமயகட்டுலயே இருக்கான் எப்பவும்??

என்பவை எளானமாகவும் எள்ளி நகையாடுதலாகவும் வெளிவரும்.

ஆனால் அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை அது ஒரு அதியாயதிற்கான வெள்ளோட்டம் என!!

நானும் அறிய முற்படவில்லை.

வெறும் பேச்சு மட்டும் ஏன்??
அம்மாவுக்கு உதவுவோம் என மளிகை பொருள் டப்பாக்களை எடுத்து நீடுவதில் தொடங்கி , காய்கறி வெட்டுவது வரை என்னை அறியாமல் என்னாயே தயார் படுத்தியது அந்த சமையலறை.

அப்ப எப்பதான் சமையல் கத்துகிடீங்க??

சத்தியமா எனக்கு நினைவில்லை!!

அப்படி தயார்படுத்தலின் சில நினைவு சிதறல்களில்,

ரொட்டியை உருளைக்கிழங்குடன் சேர்த்து செய்த சிற்றுண்டி.

கேசரி செய்ய ரவையை தீய விட்டது!

ஒரு கரண்டி தயிர் சாதம் - ஒரு முழு கோஸ் பொரியல்!!

நான் இந்த நடப்புகளின் செய்வினையையும் , செயப்பாட்டுவினையையும் அறிந்திருக்கவில்லை.

காலங்கள் கடந்தன
காரணமும் அரங்கேறியது..

அம்மா உயிருடன் இல்லை!!

பரஸ்பர விசாரிப்புகள் , சடங்குகள்,காரியங்கள் முடிந்தன.
சொந்தபந்தங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கைக்கு திரும்பினர்.

நானும்,தங்கையும்,தந்தையும் எங்கள் தினசரி வாழ்க்கைக்கு திரும்ப முற்பட்டோம்.
எங்கள் முன் இருந்த பெரும் சவால்
பசி - உணவு - சமையல் - சமையலறை
தங்கை - சமையல் அறியாதவள்
தந்தை - தேநீர் போட எதுவானவர்

நான் - எட்டி பார்த்தேன் அந்த வெற்றிடத்தை , கால்பதித்தேன் , பசியாற்ற முனைந்தேன், பசியாற்றினேன்!!

அதையே தொடர்ந்தேன்!!!

ஆனால் நான் எப்போது சமைக்க கற்றுக்கொண்டேன்??
இன்றுவரை புலப்படவில்லை!

புலபட்டதோ கேயாஸ் தியரி மட்டுமே!

காலங்கள் கடந்த போது
"உன் அம்மா போலவே மோர் குழம்பு வெசிருக்க டா" என்றார் -
"ஆம்பள பையனுக்கு அடுபங்கரையில் என்ன வேலை?? என்று சொன்ன தந்தை!!

"தக்காளி குழம்பு தோசை சூப்பர் டா" - என்றாள் தங்கை

இப்படி காலங்கள் நகர்ந்தோடின.

எனது இந்த சமையல் பயணமானது சமயலறையில் மட்டும் முடிந்துவிடவில்லை

திரைப்படமாயின் - உணவையும் , சமையல் கலையையும் மையப்படுத்திய மையப்படுத்திய படங்களுக்கே முன்னுரிமை , மொழி எதுவாயினும்!!

புத்தகங்கள் - அதற்கும் விதிவிலக்கல்ல , திரைப்படங்களின் கோட்பாடு தான்!

நான் சென்ற விழாக்கள் - சமையல் கொட்டகைகளை மையமிட்டன!

எனது ஊர் சுற்றல்கள் - புது வித உணவையும் , சமையல் நுணுக்கங்களையும் தேடி காண புறப்பட்டன!

என் சமூகமும் சமூக வலைத்தளங்களும் - உணவு மற்றும் சமையலை மையப்படுத்தியே இருந்தன!

என் இணைய தேடல்கள் - சொல்லவா வேணும்??

இத்தகைய சமையலின் தாக்கம் என் காதலையும் விட்டுவைக்கவில்லை

என் அன்னையின் இழப்பிலிருந்து என்னை மீடெடுத்த அன்றைய காதலியும் இன்றைய மனைவியுமானவள் , அந்த இமாலய முயற்சியில் கையில் எடுத்தது என் "பசியாற்றுதல்"

அதில் தொடங்கி உணவு , ருசி , சமையல் , என கடந்தது எங்கள் எண்ணமும் மனமும் ஒன்றாக பயணிக்க தொடங்கியது!!!

சொன்னால் நம்ப மாட்டீங்க எங்கள் இருவரின் எண்ண ஓட்டத்தையும் ஒன்றிணைத்து "லஞ்ச் பாக்ஸ்" எனும் வட இந்திய திரைப்படம் தான், முன் சொன்னது போல அது சமையலும் , அது வெளிப்படுத்தும் காதலையும் மையப்படுத்தும் திரைப்படம்.

காலங்கள் இவ்வாறு கடந்து கொண்டிருக்க...

இன்று வரை...

"எப்ப தான் டா பொண்டாட்டிக்குனு சமைச்சு போடுவ?? - என்கிறாள்மனைவி

"நான் எப்ப சமைக்க கத்துக்கிட்டேன்??
என்னுள் நான்

உங்களுக்கு கேயாஸ் தியரி இங்கு ஏன் வந்தது என புரிந்ததா??

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின்- (5-Aug-21, 11:39 pm)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 40

மேலே