வள்ளுவர் பேரின்பத்தை ஏன் சொல்லவில்லை

இன்பம் சொன்னவர் பேரின்பம் மறந்தார்

வள்ளுவன் ஈதல் அறமென்று பின்சொன்னார்
கொள்ளை பணத்தையும் கொள்ளர்க -- அள்ளி
விளக்கியும் காமமெனு மின்பத்தை ஏனாம்
விளககாதே பேரின்பம் விட்டு


அறம் பொருள் காமம் சொன்ன வள்ளுவன் பேரின்பக் கடவுளை
அங்கங்கே காட்டி சொல்லி அதை அடைய முழு வழியும் காட்டாது
விட்டார். அது ஏன் என்பதை ஒளவை தனது கவியில் விளக்கு கீழே
கின்றார் பாருங்கள்.

ஈதலறம் தீவினைவிட் டீட்டபொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம் பரனைநினைத் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. (ஒளவை யார்)

ஒளவை சொன்னதாவது அறம் பொருள் காமம் இம்மூன்றிலும்
உழலும் மனிதற்கு பேரின்பம் கிடைக்காது என்பதையும் வள்ளுவர் அதையேன்
விளக்க வில்லை என்பதற்கும் விளக்கம் கொடுத்ததை பாருங்கள்
அறம் பொருள் காமம் இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்கிறார் ஒளவை
பிராட்டியார். இம்மூன்றையும் யார் விடுவார் ! விடமாட்டார். ஆதலால் இவர்களுக்கு
பேரின்பம் சொல்வது வீண் என்று தெரிந்தே வள்ளுவர் சொல்ல வில்லை என்பதே
உண்மை.. அதனால் வ்தான் வள்ளுவன் கடவுளை அடையும் வழியை குறளில்
சொல்லவில்லை. வேறு பல புத்தகங்களில் பேரின்பம் பற்றி தனியாக
விளக்கியுள்ளார். அதை வாங்கிப் படியுங்கள்.
...........

எழுதியவர் : பழனி ராஜன் (6-Aug-21, 5:00 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே