அரசு அலுவலகத்தில் நிகழும் மனிதனின் பரிணாம வளர்ச்சி

அரசு அலுவலகத்தில் நிகழும் மனிதனின் பரிணாம வளர்ச்சி!

பணியில் சேர்ந்த முதல் நாளில் சாதிக்கும் பெரிய கனவுகளுடனும்,
பணிவுடனும், அப்பழுக்கில்லாத மனத்துடனும் ஒரு மனிதனாக இருக்கிறான்.

இரண்டாம் வாரத்தில் அவன் மனதில் ஒரு ஐயம் தோன்றுகிறது; "இது நமக்குச் சரியான வேலைதானா?" என்று!
மூன்றாம் வாரத்தில் அவனது பணிகளில் ஒருவிதச் சந்தேகம் தோன்றுகிறது.
நான்காம் வாரத்தில், அவனுக்கு அவன் மீதே ஒரு நம்பிக்கையின்மை தோன்றுகிறது.
ஐந்தாம் வாரத்தில் அவனது அலுவலகம் நடக்கும் முறையைக் கண்டு அவனுக்குள் ஆச்சரியம் தோன்றுகிறது!

இரண்டாம் மாத்த்தில் எந்த வேலையைச் செய்தாலும் ஒருவிதப் பதற்றம் ஏற்படுகிறது.
மூன்றாம் மாத்த்தில் அவனுக்கு இருக்கும் எல்லா நம்பிக்கையும் போய் விடுகிறது!
ஆறாம் மாதத்தில் அலுவலகப் பணிகளில் மிகுந்த ஏமாற்றம் உண்டாகிறது;
ஒன்பதாம் மாதத்தில் அவன் அலுவலகம் இருக்கும் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
ஒருவருட முடிவில், எந்த வேலையை யார் சொன்னாலும் அளவு கடந்த எரிச்சல் உண்டாகிறது!

இரண்டாம் வருடத்தில் எதற்கெடுத்தாலும் மனதில் ஒரு அதிர்ச்சி உண்டாகிறது.
நான்காம் வருடத்தில் அந்த அதிச்சியால் மடையன் ஆகிவிடுகிறான்!
ஆறாம் வருடத்தில் சரவ முட்டாளி ஆகி விடுகிறரன்.
எட்டாம் வருடத்தில் என்ன செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்பது தெரியாத மட்டிப்பயல் ஆகிறான்

பத்தாம் வருடம் பத்து வருட சர்வீஸ் முடித்ததால் இறுதியில் எந்த உணர்ச்சியும் இல்லாத
ஒரு "ஓட்டகத்தைப் போல அடிமுட்டாள் ஆகி விடுகிறாண்!!

மனிதனாக அலுவலகத்தில் நுழைந்தவன், பத்தாம் வருட முடிவில் ஒரு ஒட்டகமாக மாறிப் பரிணாம வளர்ச்சி அடைகிறான்!!

-------------------- செல்வி.செல்வப் பிரியா-சந்திர மௌலீஸ்வரன் மகி

எழுதியவர் : செல்வப் பிரியா-சந்திர மௌல (7-Aug-21, 12:28 am)
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே