யார் இவள் கவிதையா கள்ளியா

யார் இவள் கவிதையா கள்ளியா
மென்பஞ்சுபோல் மனமிருந்தும்
இரும்புபோல் விறைக்கிறாள்
கொத்தவரைபோல் விரல்களிருந்தும்
குறுவாள்போல் குத்திக்கிழிக்கிறாள்
கடல் நிலவுபோல் சூத்திரமிருந்தும்
பகலோடு பிரகாசிக்க மறுக்கிறாள்
இமயம்போல் கூர்நாசி உயர்ந்திருந்தும்
வெட்கத்தில் சிவந்திட நிதானிக்கிறாள்
வீணைபோல் குடங்களிருந்தும்
மெல்லிசை மீட்டாது தவிர்க்கிறாள்
நாணல்கள்போல் கார்குழலிருந்தும்
பஞ்சணை விரிப்பாக தயங்குகிறாள்
வானவில்போல் பொன்மேனியிருந்தும்
(மெ)முன் தூரிகையால் மோகப்பூ
ஓவியம் வரைய முணுமுணுக்கிறாள்
அன்னம்போல் குழைவிருந்தும்
அன்னமிட்டகையால் அமுதூட்டாது
விலாங்காய் நழுவ பார்க்கிறாள்
இவள் கவிதைதான்
மனங்கவர்ந்த கள்ளிதான்
தமிழ் புணர்ந்த வித்தாரகள்ளிதான்...