கவி தா, கவிதா

வாழ்க்கையே அனுபவம், அனுபவமே வாழ்க்கை என்று முடித்த கவிதாவின் கவியை கேட்டுவிட்டு 'இன்னொரு கவிதை சொல்லு கவிதா' என்று அவளது தோழிகள் வற்புறுத்தினர். கல்லூரியில் கடைசி ஆண்டு விழாவையொட்டி கவிதை போட்டிகள் நடைபெற்றது. கவிதாவுக்கு போட்டி என்பதில் விருப்பமே இல்லை. ஏதாவது போட்டியில் கலந்து கொள் என்று எவரேனும் கூறினால் 'போட்டி என்பது பொறாமையின் வேட்டி, பொறாமையோ வயிற்று எரிச்சலின் வைப்பாட்டி' என்று கவிதா கவிதையில் பதில் தருவாள். அப்படி இருப்பினும் கல்லூரின் நிறைவு நாளுக்காக நடக்கும் போட்டி, அதை போட்டி என்று எடுக்காமல் உடன் போட்டியில் கலந்து கொள்ளும் சக கல்லூரி மாணவிகளையும் மற்றும் தனது தோழிகளை திருப்தி செய்யவும் கவிதா அந்த கவிதை போட்டியில் கலந்து கொண்டாள்.

மற்றவர்கள் அனைவரையும் தமது ஒரு கவிதையை வழங்கினார்கள். கடைசியில் பங்கு கொண்ட கவிதா தனது "நிலையற்ற வாழ்க்கை" கவிதையை சொல்லி முடித்தவுடன் தான் அங்கிருந்த மாணவிகளும் அவளது தோழிகளும் கவிதாவை இன்னொரு கவிதை வழங்க சொன்னார்கள். அந்நேரத்தில் சிற்றுண்டி தேனீர் வரவே, கவிதா அந்த நேரத்தில் இன்னுமொரு கவிதையை தொகுத்தாள். அதன் தலைப்பு ' பணிந்து வழங்கு, துணிந்து முழங்கு". தேநீர் முடிந்து நடுவர்கள் சிறப்பான கவிதையை தேர்வு செய்ய தனியாக அமர்ந்தார்கள். அந்நேரத்தில் கவிதா அப்போதே கற்பனை செய்து தொகுத்த கவிதையை அங்குள்ளவர்களிடம் பகிர்ந்தாள். அங்கிருந்த மாணவிகள் அனைவரும் கவிதாவின் கவிதை படைக்கும் திறனையும் பரந்த உள்ளத்தையும் அவளது சேவை செய்யும் மனப்பான்மையையும் வெகுவாக பாராட்டினர்.

கவிதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதல் மூன்று சிறந்த கவிதைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவியர்களின் முகத்தில் இனிய கவிதையாய் பொழிந்தது மகிழ்ச்சி.
அங்கே குழுமியிருந்த மாணவிகள் முகத்தில் அந்த களிப்பு தெரியவில்லை. மாறாக ஏமாற்றமும் வருத்தமும் சந்தேகமின்றி காணப்பட்டது. காரணம், கவிதாவின் கவிதைக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கவிதா மிகவும் உற்சாகமாகவும் புன்னகையுடன் பரிசு பெற்ற மாணவிகளை வாழ்த்தி மகிழ்ந்தாள். இதை கண்டு அவளது தோழிகள் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர்.இருப்பினும் அவள் மனம் புண்படுமே என பரிசு பற்றிய பேச்சை எடுக்காமல் விட்டு விட்டார்கள்.

கல்லூரி விழா நடந்து மூன்று நாட்கள் பிறகு கவிதாவின் தோழிகள் சிலர் பெரிய ஹோட்டல் ஒன்றில் சிறப்பு விருந்து ஒன்றுக்கு கவிதாவை அழைத்தனர். அங்கே சிறிய அளவில் சில கேளிக்கைகள் நடத்தினர் அப்போது கவிதாவை அழைத்து சிறுது நேரம் அவள் வாழ்க்கையை பற்றி பேச சொன்னார்கள் கவிதா தன் வாழ்க்கையை பின்வருமாறு பகிர்ந்து கொண்டாள்:

" என்னுடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பம். தந்தை உயர் நிலை பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியர். அம்மா வீட்டோடு இருந்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மாலை மற்றும் விடுமுறை நாட்களில் வேறு பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து தந்தை கொஞ்சம் கூடுதல் வருமானம் ஈட்டினார். அப்போதுதானே இவ்வளவு பெரிய குடும்பத்தை ஓரளவுக்காவது நடத்த முடியும். பள்ளியின் இறுதி ஆண்டு படிக்கையில் நான் ஒரு கவிதை விழாவுக்கு சென்று என் கவிதை ஒன்றை பகிர்ந்து கொண்டேன். அந்த விழாவுக்கு வந்திருந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர் , விழா முடிந்தவுடன் என்னை தனியே அழைத்து " நீ சொன்ன கவிதை மிகவும் அருமையாக இருந்தது. நீ சம்மதம் தெரிவித்தால் நான் அடுத்து தயாரிக்கப்போகும் சினிமாவுக்கு நீ ஓரிரு பாடல்கள் எழுதி தரலாம். என் இசை அமைப்பாளருக்கு பிடித்திருந்தால், அதை மெட்டு கட்டி திரை பாடலாய் அமைப்பார்." நான் என் பெற்றோர்களிடம் இதை பற்றி பேசினேன். குடும்பத்தில் பண முடை இருந்ததால் என்னை திரை பாடல் எழுத ஒப்புக்கொள்ளுமாறு சொன்னார்கள். அதன் பின்னர் நான் அந்த இசை அமைப்பாளர் வீட்டுக்கு சென்றேன். இரண்டு காதல் பாடல்களை எழுதி தருமாறு அவர் சொன்னார். நான் காதல் பாடல்களை அப்போது வரை எழுதியது இல்லை. இருப்பினும் முயற்சி செய்து இரண்டு பாடல்கள் எழுதினேன். இசை அமைப்பாளர் ' பரவாயில்லை. ஆனால் வரிகளை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக அமைத்தால் ஜனங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும்" என்றார். காதலன் காதலி இருவரும் மிகவும் நெருங்கி பாடும் காட்சி என்பதால் பாடலை இன்னும் கொஞ்சம் கவர்ச்சியாக மாற்றும்படி கூறினார். அன்று இரவு நான் துக்கம் இல்லாமல் இரண்டு காதல் பாடலின் வரிகளையும் பல முறை மாற்றி பின் கடைசியில் ஒரு வழியாக எழுதி முடித்தேன். மறு நாள் சென்றபோது இசை அமைப்பாளர் என் இரண்டு பாடல்களையும் பார்த்து விட்டு " Excellent . ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி அசதி விட்டாய்". இனி நான் பார்த்து கொள்கிறேன் . இந்த பாடல்கள் மக்களுக்கு பிடித்த பாடல்களாய் அமைந்து விட்டால் உனக்கு அவசியம் எனது அடுத்த படத்திற்கு சிபாரிசு செய்வேன்" என்று என்னை புகழ்ந்து பாராட்டினார். ஆனால் ஒரு சின்ன மாறுதல் என்றார்". நான் என்ன என்று கேட்டேன் " இந்த இரண்டு பாடல்களும் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. நீ ஒரு பெண் என்பதால் இம்முறை உனது பெயரை உபயோகிக்காமல் இன்னொரு பாலடலாசிரியர் பெயரைத்தான் போட வேண்டும். இப்போது உனக்கு 25000 ரூபாய் கிடைக்கும். பாடல்கள் வெற்றி பெற்றால் உனக்கு இன்னும் பணம் கிடைக்கும் என்றார். இதற்கு சம்மதமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லி விட்டேன். அப்போது அந்த பணம் என் குடும்பத்திற்கு மிகவும் உபயோகமாக இருந்தது. நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லி விட்டேன். அப்பா அதை ரொம்ப பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் என் அம்மா " கவிதா, பணம் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் நீ எழுதிய பாடலின் வரிகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்று வருந்தினார். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.
ஆறு மாதத்திற்கு பிறகு படம் வெளியானது. நான் சிறிதும் எதிர்பாராத வகையில் என் இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி சூடியது. நான் எழுதிய காதல் பாடல்கள் இரண்டையும் செக்ஸி சிங்கர் என அழைக்கப்படும் மேனகி என்ற பாடகி ஆஅ ஹும் ஹும் ஆகா என்று முனகி நான் எழுதிய வரிகளை மிக விரசத்துடன் பாடியிருந்தார். பாடல்கள் இரண்டும் பெரும் வரவேற்பை பெற்றது, தயாரிப்பாளர் என் வீடு வந்து இன்னும் ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து நன்றி சொல்லி சென்றார். நிச்சயம் அவரின் அடுத்த திரைப்படத்திற்கு நான் பாடல் எழுத வேண்டும் அதுவும் என் பெயரிலேயே என்று வாக்கு கொடுத்து சென்றார். இளைய தலைமுறையினிடையே. பத்திரிகை ஒன்றில் " பாடலை எழுதிய கவிமன்யு காம உணர்வினை எவ்வளவு அழகாக அதே வேளையில் மனதை கிறங்க செய்வதாகவும் எழுதியுள்ளார்" என்ற விமர்சனத்தை பார்த்தேன். என் அம்மா ஒரே பாடலை மட்டும் கேட்டார். இரண்டு நாட்கள் பொறுத்து என்னிடம் தனிமையில் பேசுகையில் " நீயாக நான் இருந்தால் இதற்கு பிறகு திரை பட பாடல்கள் எழுதுவதையே நான் விட்டிருப்பேன்" என்று கூறினார். இந்த வார்த்தை என்னை சம்மட்டியால் 100 முறை ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. அந்த கணத்தில் நான் எடுத்த முடிவு தான் " இனி என் வாழ்க்கையில் திரைப்படங்களுக்காக பாடல் எழுத மாட்டேன் என்று"

கவிதாவின் தோழிகள் அதிசயித்து அளவிடமுடியாத ஆச்சர்யம் அடைந்தனர். " நம்பவே முடிய வில்லை கவிதா. நீ எழுதிய அந்த பாடல்கள் இன்று கூட மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் நீ சொல்லுவது போல அவை இரண்டுமே காம உணர்வினை தட்டி எழுப்புவதாகத்தான் அமைந்துள்ளது" என்றார்கள்.
அப்போது சில தோழிகள் கேட்டார்கள் " கவிதா,நீ அன்று கல்லூரியில் சொன்ன கவிதை அனைவர் நெஞ்சையும் தொட்டது. நிச்சயமாக நடுவர்கள் மனதையும் தொட்டுத்தான் இருக்கும். எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் உன் கவிதைக்கு முதல் பரிசு தந்திருக்க வேண்டும். போகட்டும் பரவாயில்லை. உனக்கு குறைந்தது மூன்றாவது பரிசயாவது வழங்கியிருக்கலாம். எங்கள் எல்லோருக்கும் இதை பற்றி நினைக்கே இப்போதும் மிக மனவருத்தம் தான்." கவிதா சொன்னாள் " நான்தான் நடுவர்களை போட்டிக்கு முன்பாகவே " என் சகமாணவிகள் தோழிகளின் தாங்க முடியாத அன்பு தொல்லை காரணமாகவே இந்த கவிதை போட்டியில் பங்கு கொள்கிறேன். ஒரு வேளை நான் சொல்ல போகும் கவிதைக்கு நேர்மையான முறையில் எனக்கு ஏதேனும் பரிசு கொடுப்பதாக அமைந்தால் அந்த பரிசை எனக்கு அடுத்து உள்ள மாணவிக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தால் தான் நான் போட்டியில் என் கவிதையை வழங்குவேன்" என்று விண்ணப்பம் செய்து அவர்களின் அங்கீகாரம் பெற்றபின் தான் நான் போட்டியில் கலந்து கொண்டு என் கவிதையை வழங்கினேன்" என்றாள்.இதை கேட்டு அங்குள்ள ஒவ்வொரு தோழியும் கவிதாவை கட்டி அணைத்து முத்தமிட்டு " கவிதா நீ சாதாரணமான பெண் அல்ல. அந்த மகாகவி பாரதியின் பேத்தியாகத்தான் இருக்க வேண்டும்" என்று மனமுருகி பாராட்டினார்கள்.

அவள் கல்லூரியிலேயே அதிக மதிப்பெண்கள் வாங்கி முதல் வகுப்பில் BA (literature) வெற்றி வகை சூடி கவிதா அதன் பின் MA (literature ) படித்து பின் அந்த பாடத்தில் PhD செய்து விட்டு புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் பேராசிரியையாக ஆங்கிலம் போதித்து வருகிறாள். இன்றும் கவிதா விரும்பி செய்கின்ற முக்கிய செயல், தமிழ் கவிதைகள் வடிப்பது, அவைகளை eluthu . com போன்ற தளங்களில் பிரசுரம் செய்வது தான்.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Aug-21, 2:27 pm)
பார்வை : 142

மேலே