அண்ணனும் தங்கையும்

அண்ணனும் தங்கையும்.

காலையில் தங்கை.

[ குரிவிகளே! குரிவிகளே!
எங்கள் வீட்டுச் சோலையிலே,
குடியிருக்க வந்ந குரிவிகளே!
காலையிலே காலையிலே,
நீங்கள் கூடிப் பேசுவது தான் என்னவோ!
கூறுங்கள் குரிவிகளே.]

மாலையில் அண்ணன்.

[ குரிவிகளே! குரிவிகளே!
மாலையிலே மாலையிலே,
மாந்தோப்பில் மறைந்திருந்தே,
பண்ணிசைக்கும் பாணர்களே!,
நீங்கள் கூடிப் பாடுவது தான் என்னவோ,
கூறுங்கள் குரிவிகளே!.]

இருவரும்.

[ வாருங்கள்! வாருங்கள்!
உங்களுடன் பேசிப் பாடி
மகிழ்ந்திடவே,
வாருங்கள் குரிவிகளே!.]

ஆக்கம்
சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Aug-21, 5:29 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 106

மேலே