நைனா

நைனா
■■■■■■
எனக்கு எதுக்கு அபபா 'நைனா' -னு பேரு வச்சீங்க? நான சென்னைக்குப் போறபோதெல்லாம் சென்னையிலே எல்லாப் பகுதியிலும் சென்னைத் தமிழ்ப் பேசறவங்க 'நைனா' -ங்கிற என் பேரை அடிக்கடி சொல்லறாங்க. எனக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குதுங்க அப்பா.

◆◆◆◆◆◆◆
அம்மா நைனா, சென்னைத் தமிழ்ப் பேசற அத்தனை பேரும் ஒரு ஆணை விளிக்கும்போதும் "இன்னா நைனா" -ன்னுதான் சொல்லுவாங்க. நல்லவேளை "இனியவை நைனா"ன்னு சொல்லறதில்லை. பெற்ற தந்தையையும் "நைனா" - ன்னுதான் சொல்லுவாங்க/கூப்பிடுவாங்க.
●●●●●●
சரி 'நைனா' -ன்னு எனக்கு ஏன் பேரு வச்சீங்க? என்னோட ஆராய்ச்சி செய்யறவங்க எல்லாம் என் பேருக்கு என்ன அர்த்தம்னு கேக்கறாங்க? என் தோழிகள் "உன் பேரு சென்னை மாநகரிலேயே ரொம்ப பிரபலமான பேரு நைனா" -ன்னு சொல்லி கிண்டல் பண்ணறாங்க அப்பா.

##########
அதைப்பத்தி கவலைப்படாதே நைனா. 'நைனா' -ன்னா அழகான இந்திப் பேரு. அதுக்கு 'அழகான கண்ணுடைய' -ன்னு அர்த்தம் (Nayna = beautiful eyed).

@@@@@@@@
'அழகான கண்ணுடைய' ங்கிறது பெயர்ச் சொல் இல்லையே!

@@@@@@@
அதைப்பத்தி கவலைப்படாதே நைனா. உனக்குத் தமிழ்ப் பேரை வைக்காம தற்கால தமிழர் வழக்கப்படி அழகான இந்திப் பேரை வச்சிருக்கிறோம். அதை நெனச்சு நீ ரொம்ப பெருமைப் படணும்.
■■■■■■■
எனக்கென்னவோ நீங்களும் அம்மாவும் எனக்கு வச்சிருக்கிற இந்தப் பேரை நெனச்சா வெக்கமா இருக்குதுங்க அப்பா.
@@@@@@
நீ தலைகீழா நின்னாலும் நாங்க உன் பேரை மாத்த முடியாது.

◆◆◆◆◆◆◆◆
அப்பா எனக்கு வயசு இருப்பத்தி நாலு ஆகுது. நான் ஒரு வழக்குரைஞரைப் (Notary Public) பாத்து அவர் மூலமா 'கண்மணி' -ன்னு என் பேரை மாத்தி அரசிதழ்ல (Gazette) வெளியிட்டு நீங்க எனக்கு வச்ச 'நைனா'வைத் தூக்கியெறியப் போறேன்.

@@@@@@@
அப்ப, நம்ம கிராமத்தில உன் பேரு மட்டும்தான் தமிழ்ப் பேரா இருக்கும். எல்லோரும் உம் பேரைக் கேட்டா "இந்தப் பொண்ணுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? இந்தக் காலத்தில யாராவது தமிழ்ப் பேரை வச்சுக்குவாங்களா? காலம் கெட்டுப் போச்சு" ன்னு பேசப் போறாங்க.

■■■■■
போங்க அப்பா. நான் அதைப்பத்தி அணுவளவும் கவலைப்படப் போறதில்ல.

◆◆◆◆◆◆◆
சரி சரி. என்னமோ செய். உன் விருப்பம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ நன்றி:
இண்டியசைல்ட்நேம்ஸ்.காம்.

எழுதியவர் : மலர் (22-Aug-21, 8:46 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 46

மேலே